தமிழக அரசின் மருத்துவ சேவை மற்றும் மருத்துவ சார்நிலை பணிகளில் காலியாக உள்ள டிரக் இன்ஸ்பெக்டர், ஜூனியர் ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்தம் காலியிடங்கள் : 49
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Drugs Inspector - 40
சம்பளம்: மாதம் ரூ. 37,700 - 1,19,500
தகுதி: பார்மஸி, பாராமெடிக்கல், மைக்ரோ பயோலாஜி ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: Junior Analyst in the Drugs Testing Laboratory - 09
சம்பளம்: மாதம் ரூ. 36,400 - 1,15,700
தகுதி: பார்மஸி, பாராமெடிக்கல் கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 48 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசுவிதிகள்படி குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பு தளர்ச்சி வழங்கப்படும்.
பணி அனுபவம்: 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையம்: சென்னை, மதுரை, கேவை, திச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய நகங்களில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: ஒரு முறை பதிவுக்கட்டணம் ரூ.150 மற்றும் விண்ணப்பக் கட்டணம் ரூ.200 என ரூ.350 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in, www.tnpscexams.net, www.tnpscexams.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விபரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_15_notifn_DrugsInspector_JuniorAnalyst.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.05.2019 2019