பத்தாம் வகுப்பு, ஜூன் மாத சிறப்பு தேர்வில் பங்கேற்க விரும்பும் தனி
தேர்வர்கள், நாளை மறுநாள் முதல், தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்புக்கு, சிறப்பு துணை பொது தேர்வு, ஜூனில் நடத்தப்பட உள்ளது.
இதில் பங்கேற்க விரும்பும் தனி தேர்வர்கள், ஏப்., 8 முதல், 12 வரை,
விண்ணப்பிக்க அவகாசம் தரப்பட்டது. இந்த காலத்தில் விண்ணப்பிக்காதவர்கள்,
தத்கல் முறையில், சிறப்பு கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம்.இந்த திட்டத்தில்
விண்ணப்பிக்க விரும்புவோர், நாளை மறுநாள் முதல், வரும், 24ம் தேதி வரை,
அவரவர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள, அரசு தேர்வு துறை சேவை மையங்களுக்கு
சென்று, விண்ணப்பிக்கலாம். தனியார், 'பிரவுசிங்' மையங்கள் வழியாக
விண்ணப்பிக்க முடியாது.
அரசு தேர்வு துறை சேவை மைய விபரங்களை, மாவட்ட கல்வி அலுவலகங்கள், அரசு பள்ளிகள் மற்றும், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை, தேர்வு துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.