*மதிப்பெண் முறையில், சில மாறுதல் வந்துள்ளதாகவும்; அடுத்த
முறை கூடுதல் கவனம் செலுத்துவதாக, முதன்மைக் கல்வி அலுவலர், ஆஞ்சலோ
இருதயசாமி விளக்கமளித்தார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், கலெக்டர் பொன்னையா
நேற்று, பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிட்டார்*
*காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொருத்தவரையில், கடந்தாண்டைக் காட்டிலும், 2.69 சதவீத தேர்ச்சி அதிகரித்துள்ளது தெரிய வந்தது*
*ஆனால், 100 சதவீத தேர்ச்சி என்பது கடந்தாண்டைக் காட்டிலும்,
12 பள்ளிகள் குறைவாக உள்ளன. கடந்தாண்டு, 67 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை
பெற்றிருந்தன.இந்த எண்ணிக்கையே குறைவாக இருந்ததாக புகார் எழுந்தது*
*இந்நிலையில், 12 பள்ளிகள் குறைந்து, 55 பள்ளிகள் மட்டுமே
இந்தாண்டு, 100 சதவீத தேர்ச்சியை பெற்றது குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர், ஆஞ்சலோ இருதயசாமியிடம் நிருபர்கள் கேட்டனர்.இதற்கு,
''தேர்வுத்துறையில் சில மாறுதல்கள் இந்தாண்டு கொண்டு வரப்பட்டுள்ளன*
*கடந்தாண்டு, 1,200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்தாண்டு, 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்துள்ளது*
*மாநிலம் முழுவதும், இந்த தேர்ச்சி சதவீதம் குறித்து பார்க்க
வேண்டும். அதிலும், தேர்ச்சி சதவீதம் குறைந்திருந்தால், மாணவர்களுக்கு
பயிற்சி நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்,'' என்றார்