ஆசிரியர்
தகுதி தேர்வுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது.மத்திய அரசின்
கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையில்,
பாடம் எடுக்கும் ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர் தகுதி தேர்வான, 'டெட்'டில்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. தேர்வு நடக்கும் தேதியை இன்னும், டி.ஆர்.பி., அறிவிக்கவில்லை. ஆனால், தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என, குறிப்பிட்டுள்ளது.தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நேற்று முன்தினம் துவங்கியது. இந்த பதிவை, ஏப்., 5 வரை மேற்கொள்ளலாம். கூடுதல் விபரங்களை, http://trb.tn.nic.inஎன்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Exam online ah
ReplyDeleteஏற்கனவே பாஸ் பண்ணின ஆசிரியர்களுக்கே இன்னும் அரசு வேலை கொடுக்கவில்லை.தனியார் பள்ளிகள் பணியாற்றினாலும் நியாயமான ஊதியத்துக்கு உத்தரவாதம் கொடுக்கவில்லை. பிறகு யார் கல்லாவை நிரப்ப தேர்வு வைக்கிறீர்கள்?
ReplyDelete