ஆசிரியர் தகுதி தேர்வு தொய்வு இல்லாமல் இனி ஆண்டுதோறும் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அரசு ஆணை
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சிறுபான்மையினர் என்று சொல்லக்கூடிய பல்வேறு மொழிகளை பேசக்கூடியவர்கள், அவர்களுடைய மொழிகளிலேயே தேர்வுகளில் கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்றும், அதற்கு அந்த மொழியிலேயே பதில் அளிக்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தனர். முதல்-அமைச்சரின் ஒப்புதலோடு அதை நிறைவேற்றுவதற்கு அரசு ஆணை பிறப்பித்து இருக்கிறது.
அனைவருக்கும் கல்வி என்ற முறையில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விக்காக நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
ஆண்டுதோறும் நடைபெறும்
ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் நாள் குறித்த அறிவிப்பு அதற்கான பணிகள் முடிந்து ஒருவார காலத்திற்குள் தெரிவிக்கப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையையும், மாணவர்களின் எண்ணிக்கையையும் பொறுத்து எவ்வளவு பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்று கணக்கிடப்பட்டு வருகிறது.
இன்னும் 3 நாட்களுக்குள் அந்த புள்ளி விவரங்கள் எங்களுக்கு கிடைக்கும். அதற்கேற்ப ஆசிரியர்கள் நிரப்பப்படுவார்கள். ஆசிரியர் தகுதி தேர்வு இனி தொய்வு இல்லாமல் தேவைக்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.
திட்டமிட்டபடி தேர்வு முடிவு
மாணவர்கள் சேர்க்கை விகிதம் 99 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. மத்திய அரசு கொண்டு வருகிற பல்வேறு போட்டி தேர்வுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. அதனால் நம்முடைய வினாத்தாள் முறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு கடினமாக இருந்தாலும், எதிர்காலத்தில் எளிதாக இருக்கும்.
தமிழகம் முழுவதும் 413 மையங்கள் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் உள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதுவதற்கு அண்டை மாநிலங்கள் செல்ல தேவையில்லை. அதற்கான பணிகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதியில் எந்த மாற்றமும் இருக்காது. திட்டமிட்டபடி ஏற்கனவே அறிவித்த தேதியில் தேர்வு முடிவு வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...