Home »
» தொலைதூர கல்வியில் இனி வேளாண்மைக்கு இடமில்லை..!
தொலைதூர கல்வியில் இனி வேளாண்மைக்கு
இடமில்லை..!வேளாண் பட்டப்படிப்பில் தொலைதூரக் கல்வியினை தடை செய்வதாக வேளாண்மைப்
பல்கலைக் கழக மானியக் குழு அறிவித்துள்ளது. இந்த முடிவானது உயர் கல்வித்
துறையின் ஒழுங்குமுறை ஆணையத்தால் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது.
வேளாண் பட்டப்படிப்பு கல்வி என்பது இயற்கை தொழில்நுட்பம், பரிசோதனை
முயற்சிகள், ஆய்வகச் சோதனைகள் உள்ளிட்டவற்றை ஒன்றடைக்கிய கல்வியாகும்.
இதில், தொலைதூர கல்வி முறையில் பாடமாக கற்பிக்கும் போது போதிய திறன்கள்
மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுவதில்லை.
இதுதொடர்பாக மத்திய வேளாண்துறை அமைச்சகம், உயர்கல்வி ஆணையத்துக்கு
விடுத்துள்ள கோரிக்கையினை ஏற்று தொலைதூர பல்கலைக் கழகங்களிலும், திறந்தவெளி
பல்கலைக் கழகங்களிலும் வேளாண் பட்டப்படிப்பை கற்றுக் கொடுக்க தடை
விதிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
மேலும், திறந்தவெளி மற்றும் தொலைதூர பல்கலைக் கழகங்களில், பல்கலைக்கழக
மானியக்குழுவின் ஒழுங்குமுறை ஆணையம்-2017ன்படி, தொழிற்பயிற்சி சார்ந்த
கல்வியான மருத்துவம், பொறியியல், கட்டிடவியல், செவிலியர், பல் மருத்துவம்,
மருந்து கையாளுதல், பிஸியோதெரபி போன்ற கல்விகளைக் கற்றுத்தர முடியாது.
அதன்படி, ஏற்கனவே கல்லூரிகளில் வேளாண் பட்டப்படிப்பை பயின்று வரும்
மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்திய வேளாண் ஆராய்ச்சி
குழு (ஐசிஏஆர்) சார்பில், தொலைதூர மற்றும் திறந்தவெளி பல்கலைக் கழகங்களில்
வரும் 2019ஆம் ஆண்டு முதல் புதிய சேர்க்கையை நிறுத்தி வைக்க
உத்தரவிடப்பட்டுள்ளது.
Very good decision. Practical knowledge is v.important for agri.
ReplyDelete