
ஓட்டுனர் உரிமம், வாகனங்களுக்கான ஆர்.சி. புத்தகம் ஆகியவற்றை காகித வடிவத்தில் வழங்குவதை கைவிட்டு விட்டு, நாடு முழுவதும் அவற்றை பிளாஸ்டிக் கார்டு வடிவத்தில் வழங்க மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பான புதிய விதிமுறைகளை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
இந்த கார்டுகளை பி.வி.சி. அல்லது பாலி கார்பனைட்டால் மாநில அரசுகள் தயாரித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
கார்டுகள் தரமாகவும், நீடித்து உழைக்கும்படியாகவும் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது சிப் அடிப்படையிலான ஸ்மார்ட் கார்டு அல்லது QR குறியீடு கொண்டு கார்டுகளாக வழங்க வேண்டுமா என்பதை மாநில அரசுகள் பரிந்துரைக்க முடியும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன்மூலம் எளிதான இணைப்பு, அணுகல் மற்றும் கார்டில் உள்ள தகவல்களை சரிபார்த்தல் ஆகியவை மிக எளிதானதாக மாறிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...