இன்று
கோபி அருகே ரூ.5 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை
நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து
கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், " முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு மக்கள் நலனுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி செம்மையாக செயல்பட்டு வருகின்றது.
நேற்று மார்ச் 1 முதல் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு தொடங்கி இருக்கின்றது. தமிழக மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற ஒவ்வொரு ஆசிரியரும் சிறந்த முறையில் பயிற்சி அளித்து இருக்கின்றனர்.
அனைத்து மாணவர்களும் பரீட்சையில் வெற்றி பெற எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த தேர்வு முடிந்ததும் சி.ஏ பட்டபடிப்பிற்காக மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் போன்ற இடங்களில் அரசு சார்பில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட இருக்கின்றது.
8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை வரும் திங்கட்கிழமை முதல் ஐ.சி. திட்டத்தில் 6 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்பட உள்ளது. மேலும், 9,10,11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு இண்டர் நெட் வசதி செய்து தரப்பட இருக்கின்றது.
இந்த திட்டத்தை நமது முதலமைச்சர் தொடங்கி வைக்க இருக்கிறார். பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் சில நாட்களில் லேப்-டாப் வழங்கப்பட உள்ளது.
அதேபோல், அரசு சார்பில் 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடி கணினி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இவையனைத்தும் விரைவிலேயே செய்து முடிக்கப்படும்" என அவர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...