Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அபிநந்தனுக்கு மரியாதை செய்த ஆத்விக்! குவிந்துவரும் பாராட்டுகள்!

தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராவும், தனக்கென கோடிக்கணக்கில் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித்குமார்.


எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், தனது சொந்த முயற்சியாலும், திறமையாலும் மிகப்பெரிய உயரத்திற்கு வளர்ந்துள்ளார் தல அஜித்.

தல அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான 'விஸ்வாசம்' இன்றளவு வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது.


மேலும் இவரது படங்கள் வெளியாகும் நாட்கள் திருவிழாவை போல மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


மேலும் அஜித் தற்பொழுது பிங்க் திரைப்படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார்


இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.


நடிகர் அஜித்திற்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.


 இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜித் தனது மகன் ஆத்விக்கின் பிறந்த நாளை சென்னை நட்சத்திர விடுதியில் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.


 மேலும் இந்த விழாவில் அஜித் மற்றும் ஷாலினி உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

பிறந்த நாள் நிகழ்ச்சியின்போது ஆத்விக் விமானி உடையணிந்து தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.


 பாகிஸ்தானுக்குள் பிடிபட்ட இந்தியவிமானி அபிநந்தன் மக்கள் மத்தியில் ஹீரோவாக பெருமைப்படுத்தப்பட்டு வந்த நிலையில் அஜித் மகன் ஆத்விக்கும் அவரை போற்றும்வகையில் விமானி உடை அணிந்து தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

நடிகர் தல அஜித்தின் மகன் செய்த செயல் ஒட்டுமொத்த மக்களிடமும் பாராட்டை பெற்றது.


மேலும் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive