Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர்கள், ஆசிரியர்கள் கல்வி நிறுவனத்திடம் சான்றிதழ் அளிக்க வேண்டியதில்லை: ஏஐசிடிஇ தலைவர் பேட்டி

இன்ஜினியரிங் மாணவர்கள், ஆசிரியர்கள் தனியார் கல்வி நிறுவனங்களிடம் சான்றிதழ்களை ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை ஏஐசிடிஇ தலைவர் அனில் டி. சகஸ்கரபுதே கூறினார்*
*♦♦ஓய்வு பெற்ற இன்ஜினியரிங் பேராசிரியர் பி.சி.சந்திரசேகரனின் ‘‘மாடர்ன் சயின்டிபிக் தாட்’’ என்னும் நூல் வெளியீட்டு விழா கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. இந்த புத்தகத்தை ஏஐசிடிஇ(அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில்) தலைவர் அனில் டி.சகஸ்கரபுதே வெளியிட்டார்*
*♦♦இந்நிகழ்ச்சியில் அண்ணா  பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா, ஐஐடி சென்னை முன்னாள்  இயக்குனர் எம்.எஸ்.ஆனந்த்,  அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ஆனந்தகிருஷ்ணன், புத்தக ஆசிரியர் பி.சி.சந்திரசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். புத்தக வெளியிட்டுக்கு பின் ஏஐசிடிஇ தலைவர் கூறியதாவது*
*♦♦இன்ஜினியரிங் மாணவர்களை வழிநடத்துவது தொடர்பாக ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்குகுவதற்காக  ஒவ்வொரு ஆண்டும் 50க்கும் அதிகமான கருத்தரங்குகள்நடத்தப்பட்டு வருகிறது*
*♦♦வரும் கல்வியாண்டில் 100 கருத்தரங்குகளை நடத்த திட்டமிட்டுளோம். இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்படுவதில் எங்களுக்கு எந்தவித பிரச்னையும் இல்லை*
*♦♦ஒரு இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் கலை கல்லூரி நடத்த தேவையான இடம் மீதமிருந்தால் எந்த இன்ஜினியரிங் கல்லூரி நிர்வாகமும் கலைக்கல்லூரி நடத்தலாம்*
*♦♦ஓய்வு பெற்ற 200 பேராசிரியர்கள் தேர்வு செய்து வைத்து உள்ளோம். இவர்களை அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கு அனுப்பிவைக்க உள்ளோம். இவர்கள் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். மேலும், மாணவர்களுடன் கலந்துரையாடுவார்கள்*
*♦♦இதன்மூலமாக, வரும் ஆண்டுகளில் இன்ஜினியரிங் கல்வி மேம்படுத்தப்படும். தொழில்நுட்க கல்வியை பொறுத்தவரை ஆசிரியர்கள், மாணவர்கள் தங்கள் கல்வி சான்றிதழை குறிப்பிட்ட கல்வி நிறுவனத்திடம்  ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை*
*♦♦சான்றிதழ் சரிபார்ப்புக்காக வழங்கிவிட்டு பெற்றுக்கொள்ளலாம் அல்லது பல்கலைக்கழகம் மூலம் குறிப்பிட்ட கல்வி நிறுவனம் மாணவர்கள், ஆசிரியர்களின் கல்வித்தகுதியை அறிந்துகொள்ளலாம். இவ்வாறு ஏஐசிடிஇ தலைவர் அனில் டி. சகஸ்கரபுதே கூறினார்*




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive