திருவண்ணாமலை அருகே பறவைகள் தாகம் தீர்க்க மரத்தில் தண்ணீர் பந்தல் அமைத்த
மாணவிக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை அருகே உள்ளது
நரியாப்பட்டு கிராமம்.
இக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 77 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இப்பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கும் மாணவி கு.சர்மிளா, இப்பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் கோடை காலத்தில் பறவைகள் தாகம் தீர்க்க வேண்டும் என்பதற்காக தண்ணீர் பந்தல் அமைத்துள்ளார்.
இதையறிந்த கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வாட்ஸ் அப் மூலம் அந்த மாணவிக்கு பாராட்டு தெரிவித்தார். பறவையின் தாகம் தீர்த்த மாணவிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வெ.சரவணன் பரிசு வழங்கி பாராட்டினார்.
அப்போது ஆசிரியர்கள் ஆனந்தகுமார், பழனிமுருகன், சாந்தி, கலா, மணிமேகலை உள்பட பலர் உடன் இருந்தனர்

Good work
ReplyDeleteCongratulations kutty ma