
இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி செயின்ட் லூசியா மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 28 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது.
வெஸ்ட் இன்டீஸ் அணியின் தாமல் வெறும் 21 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் கிறிஸ் கெய்ல் வெறும் 27 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார்.
அந்த அணி 12.1 ஓவர்களிலேயே வெற்றிப்பெற்றது. அவர் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்களை பறக்கவிட்டார்.
இதன் மூலம் ஒரு தொடரில் அதிகம் சிக்சர் அடித்தவர் என்ற சாதனையை கெய்ல் செய்துள்ளார்.
இந்த தொடரில் அவர் மொத்தமாக 39 சிக்சர்கள் அடித்துள்ளார்.
முன்னதாக இந்த தொடருக்கு பின் ஓய்வு பெற போவதாக கெய்ல் அறிவித்திருந்தார். ஆனால் அதனை மறுபரிசீலனை செய்ய இருப்பதாக சமீபத்தில் அவர் கூறினார்.
அப்படி அவர் தொடர்ந்து விளையாடாவில்லை இது தான் அவரது கடைசி ஒருநாள் போட்டியாகும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...