தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி
நடந்து வந்தது. தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தின்
படி இந்த தேர்வு நடத்தப்பட்டது. பிளஸ்-2 தேர்வை 8 லட்சத்து 87 ஆயிரத்து
992 மாணவ- மாணவிகள் எழுதினார்கள். 2941 தேர்வு மையங்களில் பிளஸ்-2 தேர்வு
நடந்தது. கணிதம், விலங்கியல், வணிகவியல், வேதியியல் ஆகிய பாடங்களை தவிர
மற்ற பாடங்கள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 30-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த பணி ஏப்ரல் 11-ம் தேதி முடி வடையும் என கூறப்படுகிறது. அதன்பிறகு ஏப்ரல் 19-ம் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன என பள்ளிக்கல்வி துறை அறித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...