நெதர்லாந்து நாட்டுக்கு தத்து கொடுக்கப்பட்டவர் 19 ஆண்டுகளுக்கு பின் சென்னை வந்து தன் தாயை தேடி வருகிறார்.
சென்னையில் இருந்த காப்பகம் ஒன்றில் இருந்து 2000வது ஆண்டில் லட்சுமணன் என்ற சிறுவன் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த குடும்பத்துக்கு தத்து கொடுக்கப்பட்டார்.
இப்போது, நெதர்லாந்தில் குடும்பத்துடன் வசித்து வரும் லட்சுமணனுக்கு தற்போது 24 வயது ஆகிறது. நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம்ஸ் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், தன்னுடைய நீண்ட நாள் ஆசையான, உண்மையான பெற்றோரை காண வேண்டும் என்பதை குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
சென்னையில் குறிப்பிட்ட காப்பகத்தில் பணியாற்றிய ஆசிரியையை தொடர்பு கொண்டு, சென்னை வர வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
அதை தொடர்ந்து லட்சுமணன், அவரின் சகோதரர், தாய் மூவரும் மார்ச் 11ம் தேதி சென்னை வந்துள்ளனர்.
லட்சுமணன் தத்து கொடுக்கப்பட்டது தொடர்பாக, 2 ஆவணங்கள் மட்டுமே அவர்களிடம் இருந்தது.
அந்த ஆவணங்களின் நகல்களுடன் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மார்ச் 13ம் தேதி, அவருடைய உண்மையான தாய் லோகம்மாளை கண்டுபிடித்து தர வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து, சென்னையில் அவர் பராமரிக்கப்பட்டு வந்த காப்பகம் இயங்கிய அமைந்தகரை பகுதியில் பலரிடம் விசாரித்துள்ளார்.
ஆனால் அவருடைய தாய் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்காததால், ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெங்களூரு முகவரிக்கு இன்று புறப்படுகிறார். பின்னர், பெங்களூருவில் உண்மையான தாயை தேடிவிட்டு, ஏப்ரல் 1ம் தேதி நெதர்லாந்து புறப்பட உள்ளார். இதுதொடர்பாக லட்சுமணன் கூறியதாவது:
என்னுடைய உண்மையான தாய், குடும்பத்தை பார்க்க வேண்டும் என்பது, என்னுடைய நீண்ட நாள் ஆசை. அவருடைய முகம் எனக்கு ஞாபகம் இல்லை.
எனக்கு 4 வயது இருந்தபோது, நான் அமைந்தகரையில் உள்ள காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளேன். நான் தத்துக் கொடுக்கப்பட்டேனா அல்லது என்னுடைய பெற்றோரிடமிருந்து கடத்தப்பட்டேனா என்று தெரியவில்ைல. அவருடைய பெயர் மட்டுமே என்னிடம் உள்ள ஆவணத்தில் உள்ளது.
எனக்கு 6 வயது இருந்தபோது, நான் என்னுடைய தற்போதைய பெற்றோருக்கு தத்துக் கொடுக்கப்பட்டு அவர்களுடன் நெதர்லாந்து சென்றுவிட்டேன்.
என்னுடயை தாய் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் lawini03@hotmail.com என்ற இணையதள முகவரியிேலா அல்லது +91-9080020946 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு லட்சுமணன் கூறினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...