தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் 2 மாணவிகள் மட்டுமே 10-ம்
வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். ஆனால், இவர்களை கண்காணிக்கும் பணியில் 8
அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.
தெலங்கானா மாநிலத்தில் தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
இதில், கரீம்நகர் மாவட்டம், ஹுஜுராபாத் பகுதியில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் மொத்தம் 3 மாணவிகள் தேர்வு எழுத வேண்டியிருந்தது.
இதில் ஒரு மாணவி உடல்நலக்குறைவு காரணமாக தேர்வு எழுத வரவில்லை. இதனால் 2 மாணவிகள் மட்டுமே தேர்வு எழுதினர்.
ஆனால் இதில் என்ன விசேஷம் எனில், இந்த 2 மாணவிகளை கண்காணிப்பதற்காக தலைமை கண்காணிப்பாளர், கல்வித்துறை கண்காணிப்பாளர், தேர்வு மைய கண்காணிப்பாளர், மருத்துவ உதவியாளர், 2 போலீஸார் மற்றும் 2 அதிரடி கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 8 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதனிடையே பறக்கும் படையினர் கூட இவர்களை கண்காணித்து சென்றனர்.
இவர்களுக்கு பள்ளி சார்பில் 2 உதவியாளர்களும் பணியமர்த்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...