Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு : TN Schools Attendance மேம்படுத்தப்பட்ட செயலி V 2.1.9 மூலம் ஆசிரியர் வருகையை எவ்வாறு பதிவு செய்வது?


அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு:

TN Schools Attendance மேம்படுத்தப்பட்ட செயலி V 2.1.9 மூலம் ஆசிரியர் வருகையை எவ்வாறு பதிவு செய்வது?

தற்போது மேம்படுத்தப்பட்ட TN Schools Attendance V 2.1.9 செயலியில் தலைமை ஆசிரியர்களுக்கு தனியாக, பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் கொடுக்கப் பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர்கள் TN Schools Attendance செயலியில், Log Out செய்ய வேண்டும்.

பின்னர் Google தேடு பொறி மூலம், EMIS இணைய தளத்திற்கு சென்று பள்ளி DISE எண் மற்றும் EMIS கடவுச் சொல் இட்டு உள்ளே செல்ல வேண்டும்.

ஆசிரியர்கள் (Staff Details) பகுதிக்கு செல்லவும்.

தலைமை ஆசிரியரின் பெயரை Click செய்யவும். அதில் தலைமை ஆசிரியருக்கான ID எண் இருக்கும். இதை குறித்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் Log out செய்யவும்.

தற்போது TN Schools Attendance செயலியில், தலைமை ஆசிரியரின் ID எண்ணை User ID ல் உள்ளீடு செய்யவும். கடவுச் சொல், EMIS இணைய தளத்தில் பதிவு செய்துள்ள தலைமை ஆசிரியரின் கைபேசி எண்ணை உள்ளீடு செய்து, Log in செய்யவும்.

தற்போது ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்வதற்கான ஐகான் மற்றும் பிற வழக்கமான ஐகான்கள் தோன்றும்.

Teachers என்ற ஐகான் மூலம் ஆசிரியர் வருகையை பதிவு செய்யலாம்.

 தற்போது வரை பள்ளியில் உள்ள ஆசிரியர்களின் விவரம் கைபேசி திரையில் காட்டப்பட வில்லை.

 விரைவில் ஆசிரியர்களின் பெயர் UPDATE செய்யப்படும் எனத் தெரிகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive