மத்திய பட்ஜெட்டில் வீடு வாங்குபவர்களுக்கு பல நல்ல செய்திகள் உள்ளன. இந்த நேரம்தான் வீடு வாங்க சரியான நேரம். முதல் சலுகை ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது நடுத்தர மக்களுக்கு மிக மகிழ்ச்சியான செய்தியாகும்.
2-வது வீட்டுக்கு வரி விலக்கு
விற்காத வீடுகளுக்கு கூடுதல் சலுகை கட்டுமான நிறைவுச் சான்றிதழ் பெற்று விற்கப்படாத வீடுகளுக்கு ஓராண்டுக் காலம் வரை வருமான வரிக் கட்டுவதில் சலுகை இருந்தது. ஆனால் ஓராண்டுக் காலம் வரை விற்கப்படாத நிலையில் அந்த வீடு வாடகை விடப்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டு வருமான வரி விதிக்கப்படும். இப்போது அந்தக் கவலை இல்லை. இந்தப் பட்ஜெட்டில் ஏனெனில் 2 ஆண்டுக் காலம் வரை வீடு விற்கப்படாமல் இருக்கும் வீட்டுக்கு வருமான வரி கட்ட வேண்டியதில்லை. இதனால் கட்டுநர்கள் லாபம் அடைவார்கள்.
இந்த லாபம் கண்டிப்பாக வீடு வாங்குபவருக்கும் கிடைக்கும். சொந்தமாக இரு வீடு வைத்திருப்போருக்கும் இரண்டாவது வீடு வாடகைக்குவிடப்பட்டுள்ளதாகக் கணக்கில் கொள்ளப்பட்டுவந்தது. ஒருவேளை அதில் தாய், தந்தையர் இருக்கும்பட்சத்திலும் அதற்கு வரிமான வரி கட்ட வேண்டி வந்தது. இப்போது அது தளர்த்தப்பட்டுள்ளது. இரண்டாவது வீட்டைச் சொந்தப் பயன்பாட்டுக்கு வைத்திருக்கும் வரி கட்ட வேண்டியதில்லை. மேலும் அது வீட்டுக் கடன் இருக்கும் பட்சத்தில் வருமான வரியில் விலக்கும் உண்டு.
வீட்டு வாடகைக்கான டி.டி.எஸ். வரம்பு உயர்வு
வீட்டு வாடகைக்கான டி.டி.எஸ். வரம்பு உயர்வு இந்த இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1.8 லட்சத்தில் இருந்து ரூ2.4 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு வாடகையை நம்பியிருக்கும் நடுத்தர வர்க்கத்தினர் பயன் அடைவார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...