பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்கள் செய்த தவறுக்கு ஏற்ப தண்டனை வழங்கப்பட்டதாகத் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் 2019-20-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த 8-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். இதையடுத்து தற்போது சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய விவாதத்தின்போது பேசிய, அ.தி.மு.க உறுப்பினர் செம்மலை பேசினார். அப்போது அவர், `ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நடத்திய போராட்டத்தில் எரிக்கப்பட்ட அரசாணை தி.மு.க ஆட்சிக்காலத்தில் போடப்பட்டது'' என்றார்.
சட்டப்பேரவை
குறுக்கிட்டுப் பேசிய தி.மு.க உறுப்பினர் தங்கம் தென்னரசு, ``தி.மு.க ஆட்சிக்காலத்திலும் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால், எந்த அரசு ஊழியரும் கைது செய்யப்படவில்லை. இருட்டு அறைக்குள் அரசு ஊழியர்களை அடைத்து வைத்து கழிவறை வசதிகள் கூட இல்லாத சூழலை தி.மு.க அரசு ஏற்படுத்தவில்லை'’ என்று பதிலளித்தார். இந்த விவாதத்தின் இடையே பேசிய தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ``அரசு ஊழியர்களின் போராட்டம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் போதுமான விளக்கத்தை அளித்து விட்டார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செய்த தவறுகளுக்கு ஏற்ப தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது’’ என்றார். பேரவையில் செம்மலை பேசுகையில், `தமிழக முதல்வரின் முதல் சிக்ஸர் பொங்கல் பரிசுத்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கியது.இரண்டாவது சிக்ஸர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் ரூபாய் நிதி. அடுத்த விரைவில் ஹாட்ரிக் சிக்ஸர் மட்டுமல்ல தொடர்ந்து சிக்ஸர் அடித்துக் கொண்டே இருப்பார் முதல்வர்' என்று புகழாரம் சூட்டினார்.
ஜாக்டோஜியோ போராட்டத்தில் எந்த அரசாணையும் எரிக்கப்படவில்லூ. அதற்கு முன்பு வேறொரு அமைப்பு நடத்திய போராட்டத்தில் தான் எரிக்கப்பட்டது.உரிமை உடையது கேட்டு போராடுவது தவறா?.இந்த மாறுதலை சந்திக்க ஒரு தேர்தல் உண்டு ஞாபகமிருக்கட்டும்
ReplyDeleteமானங்கெட்ட அரசியல் ! ஆசிரியர்களுக்கு தண்டனை கொடுக்க இவன் பெரிய.......
ReplyDelete