திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார்
பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர்,
முனைவர் பட்டங்களுக்கான (எம்.பில்., பிஹெச்.டி.) படிப்புகளுக்கான தகுதித்
தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 8 ஆம் தேதி கடைசி நாளாகும்.
இதுதொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் சே.சந்தோஷ்பாபு வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு:
சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள பாடப்பிரிவுகளில்
இளம் முனைவர், முனைவர் பட்ட படிப்புகளுக்கான தகுதித் தேர்வுக்கு
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முதுநிலை இறுதிப்பருவத்தில் பயிலும் மாணவர்களும் தகுதித்தேர்வில்
கலந்துகொள்ளலாம். ஆனால், இளம் முனைவர் பட்டப்பதிவின்போதும், முனைவர்
பட்டப்பதிவின் போதும் அவர்கள் முதுநிலையில் தேர்ச்சி பெற்று இறுதி
மதிப்பெண் பட்டியல் சமர்ப்பிக்க வேண்டும். இதுதொடர்பான பாடப்பிரிவுகள்,
அடிப்படைத் தகுதிகள், கட்டண விவரங்கள், தகுதித்தேர்வு தேதி மற்றும் அனுமதி
நெறிமுறைகள் ஆகியன பல்கலைக்கழகத்தின்
http://www.msuniv.ac.in இணையதள முகவரியில்
கொடுக்கப்பட்டுள்ளது.
NET/SET/JRF/GATE தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்தத் தகுதி
தேர்விலிருந்து விலக்களிக்கப்படுகிறது. தகுதித்தேர்வின் தேர்ச்சியானது
ஓராண்டுக்கு மட்டும் செல்லுபடியாகும். (இரண்டு அமர்வுகள் மட்டும்).
மேற்கண்ட தகுதித்தேர்வு எழுத விருப்பமுள்ளவர்கள், இப் பல்கலைக்கழக
இணையதளத்தில் உள்ள ஆராய்ச்சிப் பிரிவு பகுதியின் இணையதள விண்ணப்பம் மூலமாக
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இத் தகுதித்தேர்வுக்கான கட்டணத்தொகை ரூ.1,000 ஆகும். இணையதளத்தில் கடந்த 11
ஆம் தேதி முதல் விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க
கடைசி நாள் மார்ச் 8 ஆம் தேதியாகும். தகுதித்தேர்வு மார்ச் 20 ஆம் தேதி
நடைபெறும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...