Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வருகைப் பதிவேடு முறை! அங்கன்வாடி மையங்களில் செயல்படுத்த திட்டம்


அங்கன்வாடி மையங்களில் செயல்படுத்தப்படும் திட்டம், வருகைப் பதிவேடு, குழந்தைகள் வளர்ச்சி கண்காணிப்பு போன்ற பல்வேறு விபரங்களை, இதுவரை காகித ஆவணங்களில், ஊழியர்கள் பராமரித்து வந்தனர்.
இனி, 'ஆன்லைனில்' பதிய வசதியாக, ஆண்ட்ராய்டு மொபைல் போன் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி, பணியாளர்களுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில், 42 சிறு அங்கன்வாடி மையங்கள் உட்பட, மொத்தம், 2,094 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன.
இவற்றில், ஒரு பணியாளர் மற்றும் ஓர் உதவியாளர் என, மொத்தம், 3,600க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். அங்கன்வாடி மையத்தில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, பாடம் நடத்துவதுடன், அவர்களுக்கு வயதுக்கேற்ற உணவு மற்றும் இணை உணவும் வழங்கப்படுகிறது.ஊட்டச்சத்துஅதே போல், வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களையும் கணக்கெடுத்து, அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்த பணிகளை மேற்கொள்ள வசதியாக, தனித்தனியாக பதிவேடுகள் மற்றும் வருகைப்பதிவு புத்தகங்களை, அங்கன்வாடி ஊழியர்கள் பராமரித்து வருகின்றனர்.உணவு மற்றும் இணை உணவு வழங்குவதற்காக, இருப்பு வைத்துள்ள பொருட்களையும், கணக்கெடுத்து, தனியே பதிந்து வருகின்றனர்.ஆண்ட்ராய்டு மொபைல்இந்த ஆவணங்கள் இதுவரையில், காகித புத்தகங்களாக பராமரித்து, நிதியாண்டின் இறுதியில், தணிக்கைக்கு சமர்ப்பித்து வருகின்றனர். காகித ஆவணங்களை பராமரிப்பது, பணியாளர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.
இந்நிலையில், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, அங்கன்வாடி பணியாளர்களுக்கு, 'ஆன்லைனில்' பதிவேடுகளை பராமரிப்பதற்கு, மாவட்ட நிர்வாகம் பயிற்சி அளித்துள்ளது.ஒவ்வொரு தொகுதிக்கு, இரண்டு பேர் வீதம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கடந்த ஆண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் பங்கேற்றவர்கள், குழுவில் உள்ள இதர பணியாளர்களுக்கு, அந்தந்த வட்டார மையங்களில், பயிற்சி அளித்துள்ளனர்.ஆன்லைனில் ஆவணங்களுக்கான டேட்டா என்ட்ரியை பதிவு செய்வது குறித்து பயிற்சி பெற்று உள்ள பணியாளர்களுக்கு தற்போது, ஆண்ட்ராய்டு மொபைல் போன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன், சிம் கார்டு, ஹெட்செட், பேட்டரி, பவர் பேங்க் மற்றும் மெம்மரி கார்டு வழங்கப்பட்டுள்ளன. அலைபேசி, 1500 ரூபாய், பவர் பேங்க், 1,500 ரூபாய், மெமரி கார்டு, 250 ரூபாய் மதிப்பு ஆகும்.அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் மேற்பார்வைகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு மொபைல்போன் மூலம், குழந்தைகள் வருகைப் பதிவேடு, குழந்தைகள் எடை, குடும்ப நிர்வாகம், தினசரி உணவளித்தல் போன்றவை பதியப்படும்.மேலும், வீடுகள் பார்வை திட்டமிடல், வளர்ச்சி கண்காணிப்பு, வீட்டிற்கு கொண்டு செல்லும் இணை உணவு, கர்ப்பிணிகளுக்கு போடப்படும் தடுப்பூசி பட்டியல், அங்கன்வாடி மைய மேலாண்மை மாதாந்திர முன்னேற்பாடு அறிக்கை போன்றவை பதியப்படும்.திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், ராஜலட்சுமி, ஊரக தொழில் துறை அமைச்சர், பெஞ்சமின் ஆகியோர், அங்கன்வாடி பணியாளர்களுக்கு, ஆண்ட்ராய்டு மொபைல்போன்களை வழங்கினர்.
இதில், ஆட்சியர், மகேஸ்வரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், ஜெயஸ்ரீ ஆகியோர் பங்கேற்றனர்.குளறுபடி இருக்காதுஇதே போல், ஆர்.கே.பேட்டை மற்றும் திருத்தணியில் நடந்த நிகழ்ச்சியில், திருத்தணி, எம்.எல்.ஏ., நரசிம்மன் பங்கேற்று, மொபைல்போன்களை வழங்கினார். இரண்டு நாள் நேரடி செய்முறை பயிற்சிக்கு பின், பணியாளர்கள் இவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளனர்.இனிவரும் காலங்களில், காகித ஆவணங்களுக்கு, 'குட் பை' சொல்லி, ஆன்லைன் மூலம் பதிவேடுகள் தகவல் பரிமாறுவதால், குளறுபடி மற்றும் தவறு எதுவும் நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்காது என, கூறப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive