'செய்முறை தேர்வுகளில், எந்த விதிமீறலுக்கும் இடம் தரக்கூடாது' என,
ஆசிரியர்களுக்கு, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும்
மாணவர்களுக்கு, பிப்., 1ல் செய்முறை தேர்வு துவங்கியது. மாவட்ட வாரியாக,
12ம் தேதிக்குள் இந்த தேர்வை முடித்து, மதிப்பெண் பட்டியல் தயாரிக்க
உத்தரவிடப்பட்டு உள்ளது.அதேபோல, பிளஸ்1 வகுப்புக்கு, வரும், 13லும், 10ம்
வகுப்புக்கு, 21லும் செய்முறை தேர்வுகளை துவக்கி, இரண்டு வாரங்களில்
முடிக்க, தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.இதில், பல பள்ளிகளில்,
விதிமுறைகளை கடைப்பிடிக்காமல், பெயரளவில் செய்முறை தேர்வை நடத்துவதாக
புகார் எழுந்துள்ளது. மாணவர்களுக்கு, ஆய்வக உபகரணங்களின் பெயர் கூட
தெரியாமல், செய்முறை தேர்வை முடித்து விடுவதாகவும் புகார்
எழுந்துள்ளது.இதுகுறித்து, தேர்வுத்துறை சார்பில், பள்ளிகளுக்கு கடும்
எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதில், 'செய்முறை தேர்வை, மாணவர்களின் திறன்
அறியும் வகையில் நடத்த வேண்டும். அதற்கு முன், ஆய்வக உபகரணங்கள், ரசாயன
பொருட்களை பிரித்தறியும் திறன் இருக்கும் வகையில், பயிற்சிகளை முறையாக
வழங்க வேண்டும். இதில், விதிமீறலுக்கு இடம் தரக்கூடாது' என,
தெரிவிக்கப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...