இக்னோ' பல்கலையில், மாணவர் சேர்க்கைக்கு, 11ம் தேதி கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திரா
காந்தி திறந்தநிலை பல்கலையான, 'இக்னோ'வில், பட்டப் படிப்பு, சான்றிதழ்
படிப்பு போன்றவற்றுக்கு, காலண்டர் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து
வருகிறது. ஜனவரியுடன் இந்த சேர்க்கை முடிய இருந்த நிலையில், அவகாசம்,
பிப்ரவரிக்கு நீட்டிக்கப்பட்டது.
இதன்படி, 'பட்டப்படிப்பு, முதுநிலை, சான்றிதழ் மற்றும் டிப்ளமா படிப்பில் சேர விரும்புவோர், 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, இக்னோ அறிவித்துள்ளது. கூடுதல் விபரங்களை, http://onlineadmission.ignou.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இதே போல, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், மாணவர் சேர்க்கைக்கான அவகாசம், பிப்., 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, பல்கலையின் பொறுப்பு பதிவாளர், தியாகராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின், மாணவர் சேர்க்கைக்கு, 'ஆன்லைன்' வழியே விண்ணப்பம் சமர்ப்பிக்க, பிப்., 28ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யால் அங்கீகரிக்கப்பட்ட, இளநிலை, முதுநிலை, பட்டம் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர விரும்புவோர், www.tnou.ac.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். பல்கலையின் மண்டல மையங்கள் வழியாகவும், சேர்க்கை பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...