இது, கடந்தாண்டை விட, 10 சதவீதம் அதிகம்.இந்த நிதியில், உயர் கல்விக்கு, 37,461 கோடி ரூபாயும், பள்ளி கல்விக்கு, 56,386 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப கல்வி மையம், ஐ.ஐ.எம்., எனப்படும், இந்திய மேலாண்மை கல்வி மையம் மற்றும் மருத்துவ கல்வி மையங்கள் ஆகியவற்றில் ஆராய்ச்சி தொடர்பான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், அடுத்த நான்கு ஆண்டுகளில், 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.எஸ்.பி.ஏ., எனப்படும், திட்டமிடல் மற்றும் கட்டடக்கலை கல்வி மையங்கள் இரண்டை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கல்வி துறையின் தரத்தை மேம்படுத்துவதில், முக்கிய அம்சமாக தொழில் நுட்பம் திகழும். கல்வி மையங்கள், படிப்படியாக, கரும்பலகையில் இருந்து,'டிஜிட்டல் போர்டு' பயன்பாட்டுக்கு மாற்றப்பட உள்ளன.
பள்ளி ஆசிரியர்களுக்கு, டிஜிட்டல் தொழில் நுட்ப கல்வியை அறிமுகப்படுத்தும் வகையில், 'தீக் ஷா' என்ற, டிஜிட்டல் கட்டமைப்பு வசதி உருவாக்கப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...