நீலகிரி மாவட்டத்தில் குரும்பர், இருளர், பனியர், காட்டுநாயக்கர், கோத்தர், தாேடர் என பாரம்பர்யம் மிக்க ஆறு வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மக்கள் தாெகை எண்ணிக்கையில் சுமார் இரண்டாயிரத்துக்கும் குறைவாகவே உள்ள தாேடர்கள் உள்ளனர். தாேடர் பழங்குடியினத்தில் இருந்து பாரதி என்ற இளம் பெண் பல் மருந்துவராகியுள்ளார். ஊட்டி தலைக்குந்தாவை அடுத்துள்ள தேனாடு மந்தில் உள்ள அவரது வீட்டில் பல் மருத்துவர் பாரதியை சந்தித்தாேம்.
‛‛ஒன்று முதல் ஆறாம் வகுப்புவரையான பள்ளிப்படிப்பை ஹெச்.பி.எப்.பில் உள்ள அரசுப் பள்ளியில்தான் பயின்றேன். சிறு வயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என்ற கனவு இருந்தது. எனது முதல் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை எனக்கு அளிக்கப்பட்ட கற்பிக்கப்பட்ட முறை தான் மனதுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது. இப்போதுகூட எனக்கு கல்வி போதித்த ஆசிரியர்களைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்து வருகிறது. சிறு வயதில் நான் பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பேன் என்பதால், எனக்கு சிறப்பு பரிசுகள் அளித்து ஊக்கமளித்த பியூலா மிஸ்ஸை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஊட்டியில் சி.எஸ்.ஐ, ஜெம் மெமாெரியல் பள்ளியில் பயின்றேன். ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்க கோவை அவினாசிலிங்கம் பள்ளியில் படித்தேன். இதுவரை என்னை பழங்குடியின மாணவி என்று சக மாணவர்களாே, ஆசிரியர்களோ ஒதுக்கியதில்லை. எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டும் என்பதுதான் கனவாக இருந்தபாேதும் ப்ளஸ் டூ-வில் 810 மதிப்பெண் தான் எடுக்க முடிந்தது.
பிறகு கவுன்சலிங் மூலம் கோவை ஆர்.வி.எஸ். கல்லுாரியில் பி.டி.எஸ். படிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் இரண்டு ஆண்டுகளுக்கு என்னை பழங்குடியின மாணவி என்று யாருக்கும் தெரியவில்லை. அப்பாேது சென்னையில் தனியார் செய்தி நிறுவனம் சார்பில் ஒரு கருத்தரங்கம் நடந்தது. அதன் மூலம் ஓரிரு ஆசிரியர்களுக்கு நான் பழங்குடியினத்தில் இருந்து படிக்க வந்துள்ளது தெரிந்துகாெண்டு என் மீது தனிக் கவனம் செலுத்திக் காெண்டார்கள். தற்பாேது பல் மருத்துவத்தில் (முதுகலை படிப்பு) எம்.டி.எஸ். படிப்பதற்காக நீட் தேர்வு எழுதியுள்ளேன். வரும் டிசம்பர் 14-ம் தேதி அதற்கான முடிவு வெளிகாக உள்ளது. அதற்காக காத்திருக்கிறேன். நீட் தேர்வு மிகவும் கடினமாக இருந்தது. மக்கர் செய்து படிப்பவர்களுக்கு நீட் தேர்வு மிகவும் கடினமாக இருக்கும். புரிந்து படிப்பவர்கள் எளிதாக நீட் தேர்வை எழுத முடியும். நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் என் கருத்து. நான் பல் மருத்துவர் ஆகும் வரை என்னை வீட்டை சுற்றியுள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்தது. ஆனால், தற்போது அப்படியில்லை. பழங்குடியின மக்கள் தங்களை உலகறியச் செய்வதற்கு வாகனங்கள் வாங்குவதாலோ, வீடு கட்டிக் காெள்வதாலோ தங்களை உலகறியச் செய்ய முடியாது, கல்வி மட்டுமே பழங்குடியின மக்களை உலகறியச் செய்யும்’’என்றார்.
பாரதியின் தந்தை மந்தேஷ் குட்டன் மற்றும் தாய் நேந்திரா பேசுகையில், `` விவசாய தாெழில் செய்யும் நான் 10-ம் வகுப்பு வரையும் எனது மனைவி 3-ம் வகுப்பு வரையும் படித்துள்ளாேம். எங்களுக்கு 4 குழந்தைகள் முதல் மகள் திவ்யா முதுகலை படித்து, டெல்லியில் ஒரு ஐ.ஏ.எஸ். அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். இரண்டாவது மகள் பாரதி பல் மருத்துவராகியுள்ளார், மூன்றாவது மகன் சக்தி இன்பராஜ் கர்நாடக மாநிலம் மைசூருவில் சட்டம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். கடைசி மகள் பிரீத்தி பொறியியல் பயின்று வருகிறார்.
தாேடர் பழங்குடியின சமூகத்தில் பெரும்பாலான சிறுவர்கள் பள்ளிப் படிப்புடன் கல்வியை நிறுத்திவிடுகிறார்கள். தாேடர் சமூகம் மட்டுமல்ல. அனைத்து பழங்குடியின சமூகத்தில் உள்ள குழந்தைகளும் கல்வி பயில வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக எங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். தற்பாேதைய சூழ்நிலையில் தாேடர் பழங்குடியின சமூகத்தில் 10-ம் வகுப்பு முடித்தவுடன் பெண்களுக்குத் திருமணம் நடத்தப்படுவதில்லை. அவர்களும் படிப்பை தாெடர்கின்றனர். வரும் காலத்தில் தாேடர் சமுதாயத்திலிருந்து மேலும் பல பட்டதாரிகள் உருவாவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...