முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வெளியிட்ட சுற்றறிக்கை:
பொதுத்தேர்வு துவங்கும் முன்பு அறையில் தேர்வுக்குரிய முதன்மை விடைத்தாளின் பக்க எண்ணிக்கையை (பிற்சேர்க்கை) அறிந்து, விடைத்தாள் பக்கங்களின் எண்ணிக்கையை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
தேர்வர்கள் தமது முகப்புச் சீட்டில் உள்ள புகைப்படம், பெயர், பாடம் பயிற்று மொழி ஆகிய விவரங்களை சரிபார்க்க வேண்டும்.
தங்களது மேஜை மற்றும் நாற்காலிக்கு அடியில் எவ்விதமான துண்டு சீட்டுகளும் இல்லை என்பதை முன்பே உறுதி செய்ய வேண்டும்.
ஓவர் சாய்ஸில் எழுதிய விடைகளை விடைத்தாளில் எழுதிய அனைத்து விடைகளையோ அல்லது சில விடைகளையோ தேர்வரே அடித்துவிட்டால் ஒழுங்கீனச் செயல் எனக்கருதி தேர்வு முடிவு நிறுத்தப்பட்டு, வரும் இரு பருவங்களுக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.
எனவே தேர்வர்கள் விடைத்தாளில் அடித்தல் கூடாது.தேர்வர்கள் அனைத்து விடைத்தாள்கள் எழுதிய பின்னர் மீதம் உள்ள காலி பக்கங்களை கோடிட வேண்டும்.
நேரத்தை மட்டும் காட்டக்கூடிய சாதாரண வாட்ச் மட்டுமே அணிந்து வர வேண்டும்.
தேர்வுக்கு வராதவர்களின் இருக்கையில் சென்று அமராமல், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில்தான் அமர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...