இந்தியாவில் முதல் முறையாக, ஜாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் பெற்று, திருப்பத்துார் பெண் சாதனை படைத்து உள்ளார்.
வேலுார் மாவட்டம்,திருப்பத்துாரைச் சேர்ந்த, பார்த்திப ராஜாவின் மனைவி சினேகா, 21. இவருக்கு, 5ம் தேதி, தாசில்தார் சத்தியமூர்த்தி, ஜாதி, மதமற்றவர் என்ற சான்றிதழை வழங்கினார். இந்தியாவில், இந்த சான்றிதழ் பெறும் முதல் பெண் என்ற பெருமையை, சினேகா பெற்றார்.சினேகா கூறியதாவது:முதல் வகுப்பில் இருந்து, கல்லுாரி வரை, 'ஜாதி, மதம் இல்லாதவள்' எனக் கூறியே படித்தேன். என் சான்றிதழ்களில், ஜாதி, மதம் குறிப்பிடவில்லை. என் தங்கைகள் மும்தாஜ், ஜெனிபருக்கும் ஜாதி, மதம் குறிப்பிடவில்லை. எனக்கும், கணவர் பார்த்திப ராஜாவுக்கும், சடங்கு, தாலியின்றி, கடந்தாண்டு திருமணம் நடந்தது.எனவே, ஜாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்கும்படி, திருப்பத்துார் தாசில்தார் அலுவலகத்தில், பலமுறை மனு கொடுத்தும் வழங்கவில்லை. நான் புகார் செய்ததை தொடர்ந்து, சான்றிதழ் வழங்க, திருப்பத்துார் சப் - கலெக்டர் பிரியங்கா உத்தரவிட்டார்.இதையடுத்து, தாசில்தார், எனக்கு வழங்கிய சான்றிதழில், 'சினேகா என்பவர், ஜாதி, மதமற்றவர்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...