சென்னையில், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு பயிற்சி அளிக்கும், அகில இந்திய
குடிமைப்பணி தேர்வு மையத்தில் உள்ள நுாலகத்தில், ஒரு உதவியாளர் பணியிடம்
காலியாக உள்ளது. அதற்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இப்பணியிடம்,
தினக்கூலி அடிப்படையில், நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பதாரர், ஏதேனும்
பட்டப்படிப்புடன், பி.எல்.ஐ.எஸ்சி., அல்லது, எம்.எல்.ஐ.எஸ்சி., என்ற, நுாலக
கல்வி படிப்பையும் முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர், குறைந்தது
இரண்டு ஆண்டுகளுக்கு மேல், நுாலகத்தில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க
வேண்டும்.நுால்களை, கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்ய, போதிய கம்ப்யூட்டர்
அறிவு அவசியம். விருப்பம் உள்ளவர்கள், www.civilservicecoaching.com என்ற
இணையதளத்தில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பத்தை, முதல்வர், அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம்,
காஞ்சிவளாகம், பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை - 28 என்ற முகவரிக்கு,
16ம் தேதிக்குள், பதிவுத் தபாலில் அனுப்பவேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...