மின் வாரிய உதவி பொறியாளர் பணி நியமனம்
தொடர்பாக மதுரை கிளை நீதிமன்றத்தில்
பழனி பாரதி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் மீதான
விசாரணை இன்று நடைபெற்றது. இவ்வழக்கினை விசாரித்த நீதிபதிகள் சற்று
ஆவேசத்துடன் பேசினர்.. லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும்..லஞ்சம்
வாங்குவோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் லஞ்ச வாங்குவோர் மீது தேச துரோக வழக்கு தாக்கல் செய்ய
வேண்டும். அதாவது இனிமேலாவது லஞ்சம் ஒழியவேண்டும் என்றால் நிச்சயமாக
கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்று நீதிபதிகள் தெரிவித்த கருத்தால்
நீதிமன்றத்தில் சற்று நேரம் பரரப்பை ஏற்படுத்தியது.
அப்படி பார்த்தால் நிறைய அரசியல்வாதிகளையும் , அதிகாரிகளையும் முதலில் போடுங்கள்.இதை ஒரு சட்டமாக, அதற்கு அனைவரும் கட்டுப்பட்டவராகவும், அதை முறையாக கடைபிடிக்கவும் , பாரபட்சம் இல்லாமல் செய்ய முடியுமா? நீதிமன்றத்தால்.....
ReplyDeleteதமிழ் நாட்டில் அரசியல் வாதிகள். அரசு அதிகாரிகள் மற்றும் பிற துறை என 90% அழித்து புதிய தமிழகம் உருவாக்க உடனே சட்டம் தேவை. சட்டத்தை உருவாக்குவது யாரு? இது நடக்காது.
ReplyDelete