பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் மீது வழக்கு பதிவு செய்ய
தமிழக அரசிடம் லஞ்ச ஒழிப்புத் துறை அனுமதி கோரி உள்ளது என்று நாளிதழில்
1-ம் தேதி செய்தி வெளியானது.
அந்தச் செய்திக்கு மறுப்பு தெரிவித்து ராமேஸ்வர முருகன் நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:
பள்ளிக்கல்வித் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக பணிபுரிந்து பல்வேறு நிலைகளில் பணியாற்றிக்கொண்டு இருக்கிறேன். வகித்த பதவிகளில் பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி இந்தியாவுக்கே முன்மாதிரி மாநிலமாக தமிழகம் விளங்கும் வகையில் செயல்பட்டுள்ளேன்.
இந்நிலையில், என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எந்தவித முகாந்திரமும் இல்லாமல், ‘பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் மீது வழக்கு’ என்ற செய்தி நாளிதழில் வெளிவந்துள்ளது. அது முற்றிலும் தவறானது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பாவம் , .சாப்பாட்டுக்கே கஷ்டப்படுபவர்
ReplyDelete