துணை ராணுவப் படைகளில் காலியாக உள்ள 76,578 பணியிடங்களை
விரைவில் நிரப்ப நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை
அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய ரிசர்வ் போலீஸ் படை (21,566 காலிப் பணியிடங்கள்), எல்லைப் பாதுகாப்புப் படை (16,984), சஷாஸ்த்ர சீமா பல் (8,546), இந்திய-திபெத் எல்லை காவல் படை (4,126), அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் ( 3,076) மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை, இதர மத்திய ஆயுதப் படைகளில் மொத்தமுள்ள 76,578 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு பெரிய அளவிலான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
இதில் 54,953 இடங்கள் காவலர் பணியிடங்களாகும். பிப்ரவரி-மார்ச் மாதங்களுக்கு இடையே எழுத்துத் தேர்வு நடத்தப்படும். மொத்த இடங்களில் 7,646 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டவை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...