இந்தியாவில் ஆதார் அட்டையை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து,
தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்கள், அனைத்து தாலுகா அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்கள் ஆகிய இடங்களில் ஆதார் நிரந்தர சேவை மையங்கள் இயங்கி வருகிறது. இங்கு புதிய ஆதார் அட்டை வழங்கும் பணிகளும், ஆதார் அட்டையில் பிழை திருத்தும் பணிகளும் நடக்கிறது.
முதன்முறையாக ஆதார் பதிவு செய்யும்போது கட்டணம் ஏதும் வசூலிக்ககப்படுவது இல்லை. ஆனால் பெயர் திருத்தம் உள்ளிட்டவைக்கு அரசு நிர்ணயித்துள்ள ₹50 கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப இந்தியா முழுவதும் உள்ள தபால் நிலையங்களிலும் ஆதார் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் உள்ள தனிநபர்களின் புதிய ஆதார் மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்கான புதிய சாப்ட்வேர் அப்டேட் செய்யும் பணி மேற்கொள்ள இருக்கிறது.
இதற்காக நேற்று முதல் 3 நாட்கள் வரை ஆதார் சேவை மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த ஆதார் மையங்களுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஐடி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் சர்வர் பழுதாகும் போதெல்லாம் ஆதார் பணிகளில் இடர்பாடு ஏற்படுகிறது. எனவே அந்த ஐடியில் புதிய சாப்ட்வேர் இணைத்து புதிய தொழில்நுட்பத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் புதிய சாப்ட்வேர் அறிமுகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. இதனால் 3 நாட்களுக்கு புதிய ஆதார் அட்டை எடுக்கவோ திருத்தம் செய்யவோ முடியாது.
எனவே பொதுமக்கள் யாரும் ஆதாருக்காக வர வேண்டாம். இந்த புதிய சாப்ட்வேர் அறிமுகப்படுத்திய பிறகே அதன் செயல்பாடுகள் என்ன என்பது தெரிய வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...