பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் நாளை முதல் ஹால்
டிக்கெட்டுகளை இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள்
இயக்குநர் அறிவித்துள்ளார்.
பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் பலர் இந்த தேர்வில் தனித் தேர்வர்களாக பங்கேற்க உள்ளனர்.
அவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் நாளை (22ம் தேதி) பிற்பகல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பழைய பாடத்திட்டத்தின்படி (1200 மதிப்பெண்கள்) தேர்வு எழுதும் தனித் தேர்வர்கள் மட்டும் மொழிப்பாடங்களில் உள்ள ெசய்முறைத் தேர்வுகளுக்கான தேதி குறித்த விவரங்களை தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
10ம் வகுப்பு ஹால்டிக்கெட்:
பத்தாம் வகுப்பு தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் 25ம் தேதி முதல் மேற்கண்ட இணைய தளத்தில் இருந்து தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கிறது.
இது செய்முறை பயிற்சி வகுப்புகள் நடந்த பள்ளிகளில் நடக்கிறது. செய்முறை தேர்வுக்கான தேதி குறித்து தேர்வு மைய கண்காணிப்பாளரிடம் தெரிந்து கொள்ளலாம்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...