(S.Harinarayanan.GHSS Thachampet. Tvmalai dt)
ஒவ்வொரு
நாடும் ஒரு கடிகார அமைப்பை பயன்படுத்தி வந்த நிலையில், கடிகாரம் மற்றும்
அதற்கு 24 மணிநேரம் என வகுத்து ஒரே அமைப்புடைய நேர வடிவத்தை உலகிற்கு
அறிமுகப்படுத்தியவர் சான்போர்டு ஃபிளெமிங்.
இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தும் உலகளாவிய பொது நேரத்தை இவர்தான் நடைமுறைபடுத்தினார்.
சான்போர்டு
ஃபிளெமிங் 1827 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் தேதி ஸ்காட்லாந்தில்
பிறந்தார். இவர் கனடிய பசிபிக் ரயில்வே தலைமை பொறியாளராக பணியாற்றினார்.
கடிகாரத்தில் 24 நேரம்தான் என்பதையும் அதில் பகல், இரவு எனவும் வகுத்த
சான்போர்டு ஃபிளெமிங்கைப் பாராட்டி 1897 ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணியால்
‘சர்’ பட்டம் வழங்கப்பட்டது.
உலக நாடுகளின் நேரம்:
உருண்டை
வடித்தில் உள்ள பூமியை கடக ரேகை, அட்ச ரேகை என கற்பனைகோடுகளால் பிரிப்பர்.
அதன் மையக்கோட்டை 0 டிகிரி என கருதினர். இதுதான் உலக நாடுகளின்
நேரத்துக்கு ஆதாரமானது.
மையக்
கோடு இங்கிலாந்து நாட்டில் உள்ள கிரீன்விச் என்ற நகரின் மீது செல்வதால்
இந்த கோட்டிற்கு அந்த நகரின் பெயரை வைத்தார்கள். நேரத்திற்கு ‘கிரீன்விச்
மெரிடியன் டைம்’ (GMT)என்று பெயர் வைக்கப்பட்டது. இதை சுருக்கமாக
கிரீன்விச் நேரம் என்பர். 1847 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் கிரீன்விச்
நேரத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த
‘0’ டிகிரி ‘லாங்கிடியூடில்’ என்ன நேரம் காட்டுகிறதோ அதை மையமாக
வைத்துத்தான் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளும் தங்கள் நாட்டின் நேரத்தை
டிகிரி வித்தியாசத்துக்கு ஏற்றபடி சரியாக கணக்கிட்டு வைத்துக்கொள்கின்றன.
இந்த நேரத்தை கணக்கிட சான்போர்டு ஃபிளெமிங் கடிகாரத்தில் 24 மணி நேரங்களை
வகுத்துக் கொடுத்தார்.
கிரீன்விச்
மெரிடியன் நேரப்படி உலக நாடுகளை 24 பகுதிகளாக பிரித்து பூமி ரேகையில் 15
டிகிரி கோண இடைவெளியில் ஒவ்வொரு நாட்டின் நேரங்களும் கணக்கிடப்படுகின்றன.
அதன்படி, ஓவ்வொரு நாட்டின் நேரமும் மாற்றமடைகிறது. இன்று உலகம் முழுவதும்
நேரத்தைக் கணக்கிடப் பயன்படுத்தும் 24 மணி நேர கடிகாரத்தைக் கண்டுபிடித்து
உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார் சான்போர்டு ஃபிளெமிங்.
24 மணி நேரம் காட்டும் கடிகாரத்தின் அமைப்பு எப்படி இருக்கும்?
சாதாரண
கடிகாரம் போலவே, 24 மணிநேரம் காட்டும் கடிகாரமும் செயல்படும்! அந்த
அமைப்பில், 6 இருக்கும் இடத்தில் 12ம், 12 இருக்கும் இடத்தில் 00 அல்லது
24ம் இருக்கும். சாதாரண 12 மணி நேர கடிகாரம் ஒரு நாளைக்கு (24 மணி நேரம்) 2
முறை சுற்றும். அதாவது, இரவு 12 முதல் மதியம் 12, பிறகு மதியம் 12 முதல்
இரவு 12. ஆனால், 24 மணி நேர கடிகாரத்தில், மணி முள் ஒரு நாளைக்கு
ஒருதடவைதான் சுற்றும். நிமிட மற்றும் விநாடி முள் வழக்கம்போல சுற்றிவரும்.
ஐன்ஸ்டினின் கடிகார புதிர்:
ஆல்பர்ட் ஐன்ஸ்டன், வழக்கத்திற்கு மாறான இரண்டு கடிகாரங்களை வைத்து சோதனை ஒன்றை மேற்கொண்டார். இரண்டும் 24 மணி நேர வகை கடிகாரங்கள்.
ஒரு கடிகாரம் வழக்கமான வேகத்தை காட்டிலும் இரு மடங்கு வேகமாக செல்லும்.
மற்றொரு
கடிகாரம், வழக்கமான வேகத்தில் பின்னோக்கி செல்லும்; ஆனால் இரண்டு
கடிகாரங்களும் 13.00 மணியில் வரும்போது சரியான நேரத்தை காட்டும்.எத்தனை
மணிக்கு இரண்டு கடிகாரங்களும் ஒரே மணியை காட்டும்?
விடை:
ஒவ்வொரு
மணி நேரமும் ஒரு கடிகாரம் இரண்டு மணி நேரம் வேகமாக முன்னோக்கி செல்லும்,
மற்றொரு கடிகாரம் ஒரு மணி நேரம் பின்னோக்கி செல்லும்; எனவே, இரண்டு
கடிகாரத்திற்குமான வித்தியாசம் மூன்று மணி நேரங்கள்.
எட்டு
மணி நேரங்களுக்கு பிறகு 24 மணி நேர வித்தியாசம் ஏற்படும்; வேறு விதமாகச்
சொல்லப் போனால், அச்சமயத்தில் கடிகாரங்கள் மீண்டும் ஒரே நேரத்தை காட்டும்
என்றும் கூறலாம்.
13:00 மணிக்கு பிறகு எட்டு மணி நேரம் கழித்து என்பது, 21:00 மணியில் இரண்டு ஒரே நேரத்தை காட்டும் அப்போது மணி, 05.00 ஆக இருக்கும்.
(இந்த புதிர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது.)
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...