Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி : மார்ச் 1 முதல் விண்ணப்பிக்கலாம்





திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளையின் 22-ஆவது ஆண்டு விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி திருச்சியில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கு மார்ச் 1-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
 இதுகுறித்து திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளையின் தலைவர் பூவை பி.தயாபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளையின் 22-ஆவது ஆண்டு விழா திருச்சியில் வரும் மே 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 இதையொட்டி திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்தப் போட்டியில் 17 வயதுக்குள்பட்ட அனைவரும் பங்கேற்கலாம்.
 போட்டியில் 1,330 குறள்களையும் ஒப்பிக்கும் 30 மாணவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் மற்றும் விருது;  முதல் 500 குறள்களை ஒப்பிக்கும் 110 மாணவர்களுக்கு தலா ரூ.500 பரிசாக வழங்கப்படும்.
 மொத்தப் பரிசுத் தொகை ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் ஆகும்.  ஏற்கெனவே விருது பெற்றவர்கள் மீண்டும் போட்டியில் பங்கேற்க இயலாது.
 பள்ளியிலிருந்து இடைநின்றவர்களும் இதில் பங்கேற்கலாம்.  நுழைவுக் கட்டணம் கிடையாது.
தகுதியுடையவர்கள் வரும் மார்ச் 1 முதல் ஏப்.15-ஆம் தேதிக்குள் தமது சுய விவரக் குறிப்பை  பூவை.பி.தயாபரன், திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை  நிறுவனர்- தலைவர்,  எண் 25,  திருக்குறள் தெரு,  புள்ளம்பாடி,  திருச்சி மாவட்டம்- 621 711,  செல்லிடப்பேசி எண் 97865 86992 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
 மேலும் thirumulanathan@gmail.co.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
 போட்டிகள் வரும் மே 1-இல் திருச்சிராப்பள்ளி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்படும்.
 நடுவர்களாகப் பணியாற்ற விரும்பும் திருச்சி  யைச் சார்ந்த திருக்குறள் ஆர்வலர்களும்,  தமிழாசிரியர்களும் தங்கள் இசைவினைத் தெரிவிக்கலாம்.
 நடுவர்களுக்கு மதிப்பூதியம் உண்டு.   போட்டிக்கான விண்ணப்ப படிவத்தை  www.sites.google.com/site/thirumoolanathand என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive