சாதிக்க வயது இல்லை என்பதை நிரூபணம் செய்யும் விதமாக தற்போது பள்ளி
ஆசிரியர் ஒருவர் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று துணை வட்டாட்சியராக
உயர்ந்துள்ளார் என்றால் அவருடைய திறமையை பாராட்டாமல் இருக்க முடியுமா..?
கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம் சுக்காலியூர் நடுநிலைப்பள்ளி பட்டதாரி
ஆசிரியர் திருமதி.நிறைமதி. இவர் அங்குள்ள அரசு நடுநிலை பள்ளியில் ஆசிரியராக
பணியாற்றி வருகிறார். இவருக்கு அரசு தேர்வு எழுதி அதன் மூலம் நல்ல
பதவியில் அமர வேண்டும் என முக்கிய நோக்கமாக கொண்டு அதன்படியே அயராது
உழைத்து இன்று சாதனை பெண்மணியாக நிற்கிறார் நிறைமதி
கடந்த முறை நடைபெற்ற குரூப்-1 தேர்வு எழுதி வெற்றி பெற்று, சென்னையில்
நேற்று நடைபெற்ற கலந்தாய்வில், துணை ஆட்சியர் பணியை தேர்வு செய்து அதற்கான
ஆணையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதாரண ஆசிரியராக இருந்து, தற்போது துணை ஆட்சியராக உயர்வு பெற்றுள்ள
நிறைமதிக்கு மக்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
ட
ReplyDeleteEXCELLENT MADAM, CONGRATULATIONS !
ReplyDeleteதுணை ஆட்சியாளராக அல்லது துணை வட்டாட்சியரா ?
ReplyDeleteதுணை வட்டாட்சியர் இல்லை துணை ஆட்சியர்
ReplyDelete