Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.02.19

திருக்குறள்


அதிகாரம்:பொறையுடைமை

திருக்குறள் 158

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்.

விளக்கம்:

ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்.

பழமொழி

A single swallow cannot make a summer

தனிமரம் தோப்பாகாது

இரண்டொழுக்க பண்புகள்

1. தமிழர் பண்பாடு என்பது மிக பழமையானது, ஆழமானது மேலும் உலக அளவில் போற்றப் படுகிறது எனவே இதற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் என் பேச்சு மற்றும் செயல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வேன்
2. நான் மாண்புமிகு மாணவன் எனவே எனது மனதை தீய நினைவுகள் இன்றி தூய்மையாகவும் செயல்களை சுத்தமாகவும் வைத்து கொள்வேன்.

பொன்மொழி

நம் தவறுகளை புறம்காட்டும் கண்ணாடி போல வெளிப்படையாகவும், பிறரது தவறுகளை உள்முகம் காட்டும் கண்ணாடி போல மறைவாகவும் பார்க்கப் பழகுங்கள். தவறுகளின் உண்மையான தன்மையை அறிய இதுவே சிறந்தவழி.

    - தாயுமானவர்

 பொது அறிவு

1.உலக வானொலி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

 பிப்ரவரி 13

2.  உலக சமூக நீதி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

 பிப்ரவரி 20

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

சீம்பால்



1. சீம்பாலில் அல்புமின், குளோபுலின் ஆகிய புரதச்சத்து, சாம்பல் சத்து மற்று குளோரைடு போன்றவை அதிகம் உள்ளது. மேலும் லாக்டோஸ் எனும் சர்க்கரைச்சத்து குறைந்த அளவில் உள்ளது.

2. சீம்பாலுக்கும், பாலுக்கும் வேறுபாடு குளோபுலின் புரதமாகும். இது சீம்பாலில் அதிகமாக இருப்பதால் தான், அதனை காய்ச்சும்போது கட்டியாக மாறுகிறது.

3. பொதுவாக பாலை விட சீம்பாலில் இரும்புச்சத்து 17 மடங்கு வரை அதிகம் உள்ளது.

English words and Meaning

Weird.  அதிர்ஷ்டம்
Weedy. களைகள் நிறைந்த
Waxy.  மெழுகு போன்ற
Wale.  வடு, தழும்பு
Wavelet.   , சிறு அலை

அறிவியல் விந்தைகள்

பவளப் பாறைகள்
* பவளப் பாறைகள் (Coral Reefs) என்பவை கடலினுள் பவளம் எனப்படும் ஒரு உயிரினத்தால் சுரக்கப்படும் கால்சியம் கார்பனேட்டினால் உருவாகின்றன
 *இந்தியாவில், அந்தமான் தீவுகளிலும், லட்சத் தீவுகளை ஓட்டிய கடல் பகுதிகளிலும் இவை காணக்கிடைக்கின்றன
*பசிபிக் பெருங்கடலில் பல அழகான வண்ணங்களில் பவளப்பாறைகள் அமைந்துள்ளன.
*இவை பல்வேறு கடல் உயிரினங்கள் வாழ்வதற்கான இடமாகவும் இருக்கின்றன.  சுமார் 25 வகை உயிரினங்கள் இங்கு வாழ்வதாக கண்டறிந்தனர்
*இவை "கடல்களின் மழைக்காடுகள்" என அழைக்கப்படுகின்றன.

Some important  abbreviations for students

* DRES    -   Department of Renewable Energy Sources

* DPI    -   Director of Public Instruction

நீதிக்கதை

முன்னொரு காலத்தில் நந்திபுரத்தை ஆண்டு வந்த விக்கிரம சேனனுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சிம்மசேனன் எனப் பெயரிட்டு சீரும், சிறப்புமாக வளர்த்து வந்தான்.

ஆனால் சிம்மசேனனோ சிறு வயது முதலே பெரியவர்களையும், தாய், தந்தையரையும் மதிக்காமல் தன் கருத்துப்படி ஆணவத்துடன் வளர்ந்து வந்தான். அவனுக்கு எட்டு வயது நிரம்பியதும் கல்வி மற்றும் அனைத்து கலைகளையும் கற்கும் பொருட்டு குரு குலத்திற்கு அனுப்பி வைத்தார் மன்னர்.

அங்கும் அவன் யார் பேச்சையும் கேட்பதில்லை. குருவையே மதிப்பதில்லை. அவனுக்கு எப்படி புத்தி புகட்டுவது என்ற யோசனையில் இருந்தார் குரு. அந்த குருவிடம் மிருகங்களை வசியம் செய்து, அவர் நினைத்தபடி ஆட்டுவிக்கும் சக்தி இருந்தது. அதை உபயோகித்து அவனைத் திருத்தவும் ஒரு வழி கண்டுபிடித்தார்.

ஒரு நாள் அனைவரும் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது இளவரசன் மட்டும் கரையில் அமர்ந்து ஆற்றுக்குள் கல் வீசி விளையாடிக் கொண்டிருந்தான். தூரத்தில் தண்ணீர் அருந்திக் கொண்டிருந்த சிறுத்தையை, தன் வசிய சக்தியால் ஈர்த்து இளவரசனை துரத்தும்படி பணித்தார் குரு. சிறுத்தை இளவரசனை துரத்த ஆரம்பித்ததும், `அய்யோ!’ என்று அலறியபடி அடர்ந்த காட்டிற்குள் ஓடத் தொடங்கினான், இளவரசன்.

அடர்ந்த காட்டினுள் ஓடிய இளவரசன் வெகு தூரம் ஓடிக் களைத்து, ஒரு பெரிய மரத்தில் ஏறி அதன் உச்சிக் கிளையில் அமர்ந்து கொண்டான். துரத்தி வந்த புலி அவனைக் காணாமல் அங்கேயே சுற்றி சுற்றி வந்தது. பசி வயிற்றைக் கிள்ள, பயமும், அசதியும் சேர்ந்து கொள்ள அப்படியே தூங்கி போனான். திடீரென விழித்துப் பார்த்தபொழுது சிறுத்தையை காணவில்லை. சூரியன் உச்சியிலிருந்தான். பசி, களைப்பு, பயம், கவலை இவற்றால் கால், கை நடுக்கமுற என்ன செய்வதென்று புரியாமல் விழித்தான் இளவல்.

சிறு வயது முதலே தன்னை நன் றாக வளர்த்த தாய், தந்தை மற்றும் உறவினர் அனைவரையும் உதாசீனப் படுத்தியதை நினைத்து மிகவும் வருந் தினான். தன்னுடன் பயிலும் அனைத்து மாணவர்களும் குருவிடம் எவ்வளவு பயபக்தியுடன் நடந்து கொள்கிறார்கள். நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன். மற்ற மாண வர்கள் குருவுக்கு செய்யும்பணிவிடை களையும் நினைத்துக் கொண்டான். அதில் ஒன்றைக்கூட தான் செய்தது இல்லை. அதனால் தான் இத்துன்பம் நேர்ந்தது என்று நினைத்து வருந் தினான்.

உடன் அங்கேயே குருவை மனதில் நினைத்து வணங்கினான். குருகுலத்தை சென்று அடைய வழி காட்டும்படி மானசீகமாக குருவிடம் வேண்டிக் கொண்டான். அடுத்த நொடி யானையின் பிளிறல் சப்தம் கேட்டது. கீழே உற்று நோக்கிய இளவரசன் யானை ஒன்று தனியே நடந்து செல்வதை கவனித்தான். யானையின் பின்னே சீரான இடைவெளி விட்டு நரி ஒன்று செல்வதையும் பார்த்தான். யானைகள் தண்ணீர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் திறன் பெற்றவை என்று கேள்விப் பட்டிருக்கிறான். யானை தண்ணீருக்காக செல்வதை அறிந்து, அதன் பின்னால் நரியும் தொடர்ந்திருக்கக்கூடும் என்று ïகித்த இளவரசன் அவைகளுக்கு பின்னால் அவனும் நடக்க ஆரம்பித்தான்.

வெகு நேரத்திற்கு பின் யானை ஒரு ஆற்றங்கரையை அடைந்து நீர் அருந்த தொடங்கியது. ஆற்றைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்த இளவரசன் ஆற்றின் கரையோரமாக நடந்து குருவின் குடிலை அடைந்தான். குருவின் காலடியில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டிக் கொண்டான்.

நாடாள வேண்டிய மன்னன் தவறான வழியில் செல்வதை தடுக்க, இச்சிறு நாடகம் நடத்த வேண்டி வந்ததை எண்ணிய குரு, அதன் பிறகு அவனுக்கு கற்பிக்க வேண்டிய அனைத்து கலைகளையும் கற்றுக் கொடுத்து ஒரு நல்ல நாளில் மன்னரிடம் அனுப்பி வைத்தார்.

இன்றைய செய்திகள்
12.02.2019

* நாட்டின் முதல் இன்ஜின் இல்லாத அதிவேக  ‘வந்தே பாரத்’ ரயிலின் கட்டண விவரங்கள் வெளியாகியுள்ளன.

*  சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் நீட் போட்டித் தேர்வுக்கான இலவச விரைவுப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் முன்னாள் முதன்மைச் செயலாளர் எஸ்.எஸ்.ஜவஹர் அழைப்பு விடுத்துள்ளார்.இதில் சேர ஆர்வமும், விருப்பமும் உள்ள மாணவர்கள் உடனடியாக 044-26430029, 8668038347  தொலைபேசி எண்களை அழைத்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.

* தமிழகம் முழுவதும் ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.2,000 சிறப்பு நிதியுதவி: விதி எண்.110-ன் கீழ் முதல்வர்  அறிவிப்பு.

* சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) டி20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் பந்துவீச்சாளர்களில்
இந்தியாவின் குல்தீப் யாதவ், பேட்ஸ்மேன்களில் ரோஹித் சர்மா சிறப்பான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளனர்.

* சீனியர் ஸ்னுாக்கர் தேசிய சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

Today's Headlines

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌻The fare details of the country's first super fast  non - engine  'Vande Bharat' train has been released.

🌻 S.S Jayawar, former chief Secretary to the Government of India, has invited  students from Chennai to apply for free speed training for the NEET contest. Students interested in joining and enrolling can immediately call up 044-26430029, 8668038347 phone numbers.

🌻 Rs 2,000 Special Funding Scheme for Poor Workers Families in Tamil Nadu:  under Rule No. 110 announced by chief minister.

🌻International Cricket Council's (ICC) bowlers  rankings for the T20 tournament,
India's Kuldeep Yadav and   in the batsman ranking Rohit Sharma have made great progress .

🌻India's Pankaj Advani won the championship title in the senior Snooker National championship
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Prepared by
Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive