சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வு, நாளை
துவங்குகிறது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட
திட்டத்தில், பிளஸ் 2 தேர்வுகள், பிப்., 15ல் துவங்கின.முதற்கட்டமாக,
தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான, தொழிற்கல்வி பாடங்களுக்கு மட்டும்,
தேர்வுகள் நடந்து வருகின்றன. முக்கிய பாடங்களுக்கு, மார்ச், 2ல் தேர்வு
துவங்க உள்ளது.இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு
மாணவர்களுக்கு, நாளை பொது தேர்வு துவங்குகிறது.
முதல் கட்டமாக, விருப்ப
பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கின்றன. முக்கிய பாடங்களுக்கு, மார்ச், 7ல்
தேர்வுகள் துவங்க உள்ளன.இந்த தேர்வில், 21 ஆயிரத்து, 400 பள்ளிகளை சேர்ந்த,
22 திருநங்கையர், 7.56 லட்சம் மாணவியர் உட்பட, 18.27 லட்சம் மாணவ,
மாணவியர் பங்கேற்க உள்ளனர்.இவர்களுக்கு, நாடு முழுவதும், 4,974 தேர்வு
மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு அறைக்கு, காலை, 10:00 மணிக்குள்
ஆஜராகாவிட்டால், தேர்வு எழுத முடியாது என, சி.பி.எஸ்.இ., அறிவித்துஉள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...