சென்னை, போரில் உயிரிழக்கும் ராணுவ வீரர்களுக்கு பொது மக்கள் நேரடியாக உதவும் வகையில் பாதுகாப்பு துறை சார்பில் துவங்கப்பட்ட வங்கி கணக்கில் இதுவரை 100 கோடி ரூபாய்க்கு மேல் நிதி பெறப்பட்டுள்ளது.இதுகுறித்து சிண்டிகேட் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:போரில் மரணமடையும் ராணுவ வீரர்களுக்கு உதவும் வகையில் 2016 அக்டோபரில் டில்லி சவுத் பிளாக்கில் உள்ள சிண்டிகேட் வங்கி கிளையில் பாதுகாப்பு துறை சார்பில் வங்கி கணக்கு துவங்கப்பட்டது. 'போரில் உயிரிழக்கும் ராணுவ வீரர்களுக்கான நல நிதி' என்ற பெயரில் துவங்கப்பட்ட இந்த வங்கி கணக்கில் தனி நபரோ, நிறுவனமோ, யார் வேண்டுமானாலும் நிதி உதவி வழங்கலாம்.இந்த கணக்கிற்கு வரும் நிதியை பணமாக எடுக்க முடியாது. இதற்கென தனி கட்டுப்பாடுகள் உள்ளன. இதுவரை 100 கோடி ரூபாய்க்கு மேல் இந்த வங்கி கணக்கில் பணம் சேர்ந்துள்ளது.சிண்டிகேட் வங்கியை தவிர வேறு எந்த வங்கியிலும் ராணுவ வீரர்களுக்கு உதவும் வகையில் நிதி வழங்கும் கணக்குகள் இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Revision Exam 2025
Latest Updates
Home »
» ராணுவ வீரர்களுக்கான வங்கி கணக்கில் ரூ.100 கோடி
ராணுவ வீரர்களுக்கான வங்கி கணக்கில் ரூ.100 கோடி
சென்னை, போரில் உயிரிழக்கும் ராணுவ வீரர்களுக்கு பொது மக்கள் நேரடியாக உதவும் வகையில் பாதுகாப்பு துறை சார்பில் துவங்கப்பட்ட வங்கி கணக்கில் இதுவரை 100 கோடி ரூபாய்க்கு மேல் நிதி பெறப்பட்டுள்ளது.இதுகுறித்து சிண்டிகேட் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:போரில் மரணமடையும் ராணுவ வீரர்களுக்கு உதவும் வகையில் 2016 அக்டோபரில் டில்லி சவுத் பிளாக்கில் உள்ள சிண்டிகேட் வங்கி கிளையில் பாதுகாப்பு துறை சார்பில் வங்கி கணக்கு துவங்கப்பட்டது. 'போரில் உயிரிழக்கும் ராணுவ வீரர்களுக்கான நல நிதி' என்ற பெயரில் துவங்கப்பட்ட இந்த வங்கி கணக்கில் தனி நபரோ, நிறுவனமோ, யார் வேண்டுமானாலும் நிதி உதவி வழங்கலாம்.இந்த கணக்கிற்கு வரும் நிதியை பணமாக எடுக்க முடியாது. இதற்கென தனி கட்டுப்பாடுகள் உள்ளன. இதுவரை 100 கோடி ரூபாய்க்கு மேல் இந்த வங்கி கணக்கில் பணம் சேர்ந்துள்ளது.சிண்டிகேட் வங்கியை தவிர வேறு எந்த வங்கியிலும் ராணுவ வீரர்களுக்கு உதவும் வகையில் நிதி வழங்கும் கணக்குகள் இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...