இந்தியாவில் அடிக்கடி போலியான செய்திகள்
மற்றும் வதந்திகளால் பல்வேறு பிரச்சனைகள் உருவாகின. ஒரு கட்டத்தில்
குழந்தைகளை கடத்த வந்தவர்கள் என்று எண்ணி, ஆங்காங்கே கொலைகளையும் செய்யத்
தொடங்கினர். இது போன்ற விசயங்களை கருத்தில் கொண்டு, இந்திய அரசாங்கம்,
போலிச் செய்திகள் மற்றும் வதந்திகளை பரப்புவதை எப்படி தடை செய்வது என்று
தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு, வாட்ஸ்ஆப் மற்றும் ஃபேஸ்புக்
நிறுவனங்களின் உதவியை நாடினார்கள்.
அதன் பின்பு, வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்டுகளை
கொண்டு வந்தது. ஃபார்வர்ட் லேபில்கள் மூலம், செய்திகளின் உண்மைத் தன்மையை
மக்கள் உணரும் படி அப்டேட்டுகள் அமைந்தன. அதன் பின்னர் ஃபார்வர்ட்
மெசேஜ்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பாக வெகுநாட்கள் திட்டம்
தீட்டப்பட்டது. இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது ஃபார்வர்ட் மெசேஜ்களின்
எண்ணிக்கை கட்டுப்பாடு. இந்த புதிய அப்டேட்படி, இனிமேல் ஒரு மெசேஜ்ஜை ஐந்து
நபர்களுக்கு மேல் ஃபார்வர்ட் செய்ய இயலாது. இந்த அப்டேட்டினை கடந்த ஆறு
மாதங்களுக்கு முன்பே வாட்ஸ்ஆப் கொண்டு வந்திருந்தாலும், அதன் ஃபீட்
பேக்குகள், நடைமுறை சிக்கல்கள் ஆகியவற்றை முறையே அவதானித்து, உலகம்
முழுவதும் இந்த அப்டேட்டினை இன்று முதல் அமலுக்கு கொண்டு வருகிறது
வாட்ஸ்ஆப். உலகம் முழுவதும் சுமார் 1.5 பில்லியன் மக்கள் இந்த குறுஞ்செய்தி
செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியா, ப்ரேசில், இந்தோனேசியா போன்ற
நாடுகளில் அதிக அளவு இந்த செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆறு
மாதங்களில் 25% வரை ஃபார்வர்ட் செய்யப்படும் குறுஞ்செய்திகளின் எண்ணிக்கை
குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...