தமிழக அரசு, பள்ளிக்கல்வித் துறை மூலம் நடப்புக் கல்வியாண்டில் அறிவியல் தொழில்நுட்பம், கலை, இலக்கியத்தில் சிறந்து விளங்கும் ,தேசிய அளவில் சாதனை படைத்த 50 மாணவர்களை மேலை நாடுகளான பின்லாந்து, சுவீடன் நாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
இதில் கரூர் மாவட்டம், வெள்ளியணை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 பயிலும் ர.சதிஷ்குமார் என்ற மாணவர் தேர்வு பெற்றுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் வழிகாட்டி ஆசிரியர் பெ.தனபால் அவர்களிடம் பயிற்சி பெற்று சூரிய சக்தியில் இயங்கும் கழிவறை, நீர்த்தாங்கிகள் செறிவூட்டல் , பாதை மாறிய தேனீக்களால் பாதித்த விவசாயம் ஆகிய கண்டுபிடிப்புகளை தனது ஆய்வுக் கட்டுரை மற்றும் படைப்புகள் மூலம், பள்ளிக் கல்வித்துறை, தமிழக அரசு கலை பண்பாட்டுத் துறை,தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, அக்னி இக்னைட் சென்னை, புதியதலைமுறை வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி ஆகிய அறிவியல் கண்காட்சியில் ,மாவட்டம், மாநிலம் (சென்னை ), தென்னிந்திய அளவில் (பெங்களூர்) , தேசிய அளவில் (சென்னை) என தன் வழிகாட்டி ஆசிரியருடன் 2500 கி.மீ பயணித்து தனது அறிவியல் கண்டுபிடிப்பு மூலம் மக்களுக்கும், மாணவர்களுக்கும் அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் பள்ளியில் அப்துல் கலாம் துளிர் இல்லம் மாணவர்கள் குழுத் தலைவராக இருந்து சக மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார் ர.சதிஷ் குமார்.
பின்லாந்து மற்றும் சுவீடன் நாடுகளுக்கு செல்லும் ர.சதிஷ் குமார் கரூர் மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் திரு.க.தங்கவேல் ஐயாவை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
கிராமப்புற அரசுப் பள்ளி மாணவரின் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில், மேலை நாடுகளுக்கு கல்வி பயணம் மேற்கொள்ளும் வகையில் ர. சதிஷ் குமார் என்ற மாணவரை தேர்வு செய்த தமிழக அரசு, பள்ளிக்கல்வித் துறைக்கும், பாராட்டி ஊக்கப்படுத்திய கரூர் மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் ஐயா அவர்கள், முதன்மைக் கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர்கள், கரூர் மாவட்டம் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர், பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி கட்டிடக் குழு, பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு, பள்ளி முன்னாள் மாணவர் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் , ஆசிரியர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், பத்திரிக்கை, ஊடகங்கள் , பொதுமக்கள், முகநூல், கட் செவி அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த கோடான கோடி நன்றிகள்.
பெ.தனபால்.
பட்டதாரி ஆசிரியர்,
(தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருது பெற்றவர்)
அ.ஆ.மே.நி.பள்ளி,
வெள்ளியணை, கரூர் மாவட்டம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...