ஜியோ நிறுவனம் சார்பில் புதிய ஆண்ட்ராய்டு பிரவுசர் அறிமுகம் செய்துள்ளது. இதனால் எளிமையாதாகவும் இருக்கின்றது.
இதன் வேகமும் அதிமாக இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் பிரவுசரின் அளவு 4.8எம்பி மட்டுமே உள்ளது.
ஜியோ நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு பிரவுசரால், குரோம் பிரவுசருக்கு நாம் குட்பாய் செல்லவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
ஜியோ நிறுவனம்:
இந்தியாவில் ஜியோ நிறுவனம் பல்வேறு தொழில்களில் இறங்கி வெற்றி கண்டு வருகின்றது. ஜியோ நிறுவனம் செல்போனை தொடர்ந்து தொடர்ந்து, ஜியோ வை-பை, ஜியோ-ஜிகா பைபர் உள்ளிட்ட நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வருகின்றது.
இதில் மிகவும் குறைந்த கட்டணத்தில், சேவை வழங்குவதாக ஜியோ நிறுவனம் இருக்கின்றது. மக்களிடமும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது ஜியோ நிறுவனம்
ஜியோ பிரவுசர்:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ பிரவுசர் என்ற பிரத்தியேகமான அப்ளிகேஷனை பல்வேறு இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வசதியுடன் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் முதல் பிரவுசர்:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவின் முதல் பிரவுசர் என்ற அறிவிப்புடன் ஜியோ பிரவுசர் என்ற பிரத்யேக மொபைல் அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளது.
வேகமாக இயங்கும்:
எளிமையாகவும் வேகமாகவும் இயங்கும் இந்த பிரவுசரின் அளவு வெறும் 4.8MB மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.
8 மொழிகளில் அறிமுகம்:
எட்டு இந்திய மொழிகளில் இதனை பயன்படுத்தலாம். அதாவது தமிழ், இந்தி, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் பயன்படுத்தும் வசதி உள்ளது.
ஐபோன்குக்கும் வருகின்றது:
தற்போது ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு மட்டும் பயன்படும் வகையில் கூகுள் பிளே ஸ்டோரில் வெளியாகியிருக்கிறது. ஐபோன்களுக்கும் விரைவில் இந்த பிரவுசர் கிடைக்கும் எனக் கருதப்படுகிறது.
பொது மக்களிடம் வரவேற்பு:
ஜியோ பிரவுசர் அறிமுகம் செய்துள்ளதால், பொது மக்களிடம் அதிக வரவேற்பும் கிடைத்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...