9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ம் தேதியில் இருந்து ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம் நடைபெற்று வந்தது.
இன்று (30.01.2019) சென்னையில் ஜாக்டோ ஜியோ வின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. அதன்படி,
போராட்ட காலத்தில் போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்,
தற்பொழுது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பணி அளிக்கவேண்டும்,
நாளை முதல் பணியில் சேர உள்ளோர் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது,
21-ம் தேதி நிலையிலேயே தொடர் பணிக்காலமாக ஏற்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள்களுடன்
எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது நிலுவையில் தான் உள்ளது என்ற போதிலும்
தமிழக முதல்வர் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க
பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி
ஜாக்டோ-ஜியோவின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் இன்று (30.01.2019) மாலையுடன் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்படுகிறது.
முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பணிக்குத் திரும்பும் ஆசிரியர்கள் மீது ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் மீண்டும் ஜாக்டோ ஜியோ போராட்டக் களத்தில் இறங்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...