கோவையில் போக்குவரத்து விதிமீறல்களை பொதுமக்கள் காவல்துறைக்கு தெரிவிக்க போலீஸ் இ ஐ (police e eye) என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனைமாநகர காவல் ஆணையர் சுமித்சரண் இன்று தொடங்கி வைத்தார்.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில்,போலீஸ் இ ஐ (police e eye) என்றபோக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கும் புதிய செயலியை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் தொடங்கி வைத்தார். இந்த செயலி மூலம் பொதுமக்களே போக்குவரத்து விதிகளை மீறி பயணம் செய்பவர்களை புகைப்படம் எடுத்து காவல்துறைக்கு அனுப்ப முடியும் எனவும், அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்ட இடமும், நேரமும் இந்த செயலியில் பதிவாகும் எனவும் அதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
மேலும்,செயலியைசோதனை அடிப்படையில் நடைமுறை செய்து பார்க்கப்பட்டதில் 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும்,விதிமுறை மீறிய 30 அரசு பேருந்துகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து உதவி ஆணையர் ராஜ்கண்ணண் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...