வருமான வரி கணக்கு தாக்கல் மற்றும் அதன் மீதான பரிசீலனையை
எளிமைபடுத்தும் வகையில், புதிய திட்டத்தை வடிவமைக்கும், 4,242 கோடி ரூபாய்
ஒப்பந் தத்தை, 'இன்போசிஸ்' நிறுவனத்துக்கு அளிக்க, மத்திய அமைச்சரவை
ஒப்புதல் அளித்துள்ளது.
வருமான வரி, கணக்கு,தாக்கல்,புதிய,திட்டத்துக்கு,அனுமதி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம், டில்லியில்
நேற்று நடந்தது.இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, ரயில்வே
அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பியுஷ் கோயல் கூறியதாவது:
வரி செலுத்துவோருக்கு உதவும் வகையில், வருமான வரி கணக்கு தாக்கல் மற்றும்
அதன் மீதான பரிசீலனைக்கு, தற்போது பயன்பாட்டில் உள்ள மென்பொருள் மற்றும்
நடைமுறையில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளோம். அதன் படி,புதிய நடைமுறையை
வடிவமைத்து தரும்
பணியை, இன்போசிஸ் நிறுவனத்துக்கு வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக, 4,242 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
அடுத்த, 18 மாதங்களுக்குள், இந்த நிறுவனம், புதிய நடைமுறையை வகுக்கும்.
பரிசோதனைகளுக்குப் பின், அது பயன்பாட்டுக்கு வரும்.இந்த புதிய முறையின்
மூலம், கணக்கு தாக்கல் செய்த பின், ஒரே நாளில், அது பரிசீலிக்கப் பட்டு,
அதன் மீதான உத்தரவு பிறப்பிக்கப்படும்.
கூடுதல் வரி பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், வரி செலுத்துவோரின் வங்கிக்
கணக்கில், உடனடி யாக தொகை சேர்க்கப்படும்.வரி செலுத்துவதை வெளிப்
படையாகவும்,அதிகாரிகள் தலையீடு இல்லாமலும், மிக விரைவாகவும் செய்யும் வசதி
கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
பல்கலைகளை மேம்படுத்த
ரூ. 3,600 கோடி ஒதுக்கீடு
ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் கூறிய தாவது: மத்தியில், மன்மோகன் சிங்
தலைமையில் இருந்த, ஐ.மு..கூட்டணி ஆட்சியில், மத்திய பல்கலைகள்
சட்டம்,2009ன் கீழ், 13மத்திய பல்கலைகள் அமைக்க
பட்டன.தமிழகம், பீஹார், ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, ஒடிசா,
பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா
ஒன்றும், ஜம்மு - காஷ்மீரில், இரண்டும், மத்திய பல்கலைகள் அமைக்கப்பட்டன.
இந்த மத்திய பல்கலைகள், போதிய உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் பாதிக்கப்
பட்டுள்ளன. இது பற்றி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 13
மத்திய பல்கலைகளிலும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, ௩,௬௩௯.௩௨ கோடி
ரூபாய் ஒதுக்க, கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பணிகளை, 36
மாதத்துக்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...