ஜலந்தரில் நிறைவடைந்த 106-வது இந்திய அறிவியல் மாநாட்டில், 'இந்தியா வின்
பெருமை' என்ற தலைப்பில் அமைக்கப்பட் டிருந்த இந்திய அறிவியல் படைப்புகளின்
கண்காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
டி.ஆர்.டி.ஓ., இஸ்ரோ, சி.எஸ்.ஐ.ஆர்., இந்திய மருத்துவ ஆராய்ச்சி
கவுன்சில், அறிவியல் தொழில்நுட்பத் துறை, அணுசக்தித் துறை, வேளாண்மை
ஆராய்ச்சி கவுன்சில் ஆகிய இந்திய அறிவியல் நிறுவனங்கள் தங்கள் படைப்புகளை
அழகிய அரங்குகளில் காட்சிப்படுத்தி இருந்தன.
ஆர்வத்துடன் வந்த கோவை மாணவிகள்
பஞ்சாபில் உள்ள ஜலந்தர் லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழகத்தில் மாநாடு நடந்த
காலை 10 மணிக்கு 10 டிகிரி குளிர் நிலவியது. இருப்பினும், கூட்டம்
அலைமோதியது. மாநாட்டுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வந்ததையொட்டிப்
போடப்பட்ட பாதுகாப்புக் கெடுபிடிகளையும் தாண்டி, இந்தியாவில் அறிவியலுக்கு
இவ்வளவு ஈர்ப்பா என ஆச்சரியப்படும் வகையில் கூட்டம் இருந்தது.
வடமாநிலங்களில் இருந்து மட்டுமல்லாமல் தென்னிந்தியாவில் இருந்தும் நிறையப்
பார்வையாளர்கள் வந்திருந்தனர்.
கோயம்புத்தூரில் இருந்து வந்த
மாணவிகள், மைசூருக்கு அருகிலுள்ள கிராமத்துப் பள்ளிக்கூடத்தின் அறிவியல்
ஆசிரியர் என ஆர்வத்தோடு ஏறக்குறைய மூவாயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து
வந்தவர்களையும் பார்க்க முடிந்தது.
ஆகாஷ் ஏவுகணைகளும் பிரம்மோஸ் ஏவுகணையும் வாசலில் வரவேற்ற ராணுவ ஆராய்ச்சி
நிறுவனங்களின் கண்காட்சி அரங்கு பார்வையாளர்களுக்கு அறிவியல் விருந்தாக
அமைந்தது.
பிளாஸ்டிக் தேக்கரண்டிகளும் தட்டுகளும் பயன்பாட்டுக்குப் பிறகு மட்காத,
குப்பைக் கழிவுகளாகி, சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. மைசூரிலுள்ள ராணுவ
உணவு ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ள ஸ்பூன், பயன்படுத்திய பின்னர்
குப்பைக்குப் போகாது, தொப்பைக்குப் போகும். ஆம். கரண்டியை மென்று
சாப்பிடலாம்.
மாவுதான் கரண்டியின் மூலப்பொருள். இப்படி ஸ்டார்ச்சால் செய்யப்பட்ட
கிண்ணம்கூடக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இனிப் பலகாரம் தின்றபின்
கிண்ணங்கள் மாயமாவது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்!
செல்ஃபி ரோபோ
மடித்து விரிக்கக்கூடிய கையடக்க ஸ்டவ் உண்டு. ஹெக்ஸமைன் மாத்திரைகள்தாம்
இதற்கு எரிபொருள். இரண்டையும் எளிதில் எங்கும் எடுத்துச் செல்லலாம்.
பனிச்சரிவு ஆய்வு மையத்தின் அரங்கில், ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி
அளிக்கப் பயன்படும் வெர்சுவல் ரியாலிட்டி கருவி அணிந்து பார்வையாளர்கள்
பனிமலையில் உலவி, பியாஸ் நதியில் கால் நனைத்தனர்.
பெங்களூருவி லுள்ள செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் மையத்தின் வேவு ரோபோ
மாணவர்களைக் கவர்ந்தது. குட்டி ராணுவப் பீரங்கி போலிருக்கும் இதைத்
தூரத்திலிருந்து கட்டுப்படுத்தி வீடியோ காட்சி உள்ளிட்ட தரவுகளைப்
பெறலாம்.
வெடி பொருட்கள், அணு, உயிரி ஆயுதங்களைச் சோதித்துச் செயலிழக்கச் செய்யும்
இயந்திரக் கைகளும் கேமரா கண்களும் கொண்ட தக்ஷ் ரோபோவும் இளைஞர்களின்
செல்ஃபி நாயகனாக வலம் வந்தது. இது பூனாவிலுள்ள ஆராய்ச்சி, மேம் பாட்டுப்
பொறியியல் நிறுவனத்தின் தயாரிப்பு.
சென்னையின் தனித்துவம்
கொச்சியின் கடல் தொழில்நுட்ப ஆய்வகத்தின் தானியங்கி வேவு நீர்மூழ்கி,
விமானத்திலிருந்து ராணுவ டாங்க் வாகனத்தை பாராசூட் மூலம் தரையிறக்கிய
ஆக்ராவின் பாராசூட் ஆய்வகத்தின் படைப்புகள், நவீனத் துப்பாக்கி ரகங்கள் என
அறிவியல் தொழில்நுட்பச் சுவாரசியங்களுக்குக் கண்காட்சியில் கொஞ்சமும்
பஞ்சமில்லை.
சென்னையின் போர் வாகன ஆராய்ச்சி நிறுவனத்தின் அர்ஜுன் டாங்க் வாகனமும்
தொடர்புடைய தொழில்நுட்பங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
கொசுவிரட்டியைப் போலப் பாம்பு விரட்டியும் உண்டு. ஸ்பிரே குடுவை யில் உள்ள
மருந்தைத் தெளித்த இடத்தில் ஏறக்குறைய 6 மணி நேரம் பாம்புகள் நெருங்காது.
இதுபோன்று நவீன இந்தியாவின் அதிநவீன ஆராய்ச்சி வெல்லட்டும்!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...