(S.Harinarayanan,PGT -GHSS -Thachampet)
இடது கை பழக்கம் உள்ளவர்களை 'சினிஸ்ட்ராலிட்டி' என்று குறிப்பிடுவார்கள். இது ’சினிஸ்டரா’ என்ற லத்தின் சொல்லில் இருந்து உருவானது. ‘சினிஸ்டரா’ என்றால் ‘இடது பக்கம் இருப்பது’ என்று பொருள். இடது கை பழக்கம் உள்ளவர்களை வலிமையற்றவர்களாகவும் தூய்மையற்றவர்களாகவும் எதிர்மறை எண்ணம் கொண்டவர்களாக கருதும் மனோபாவம் இன்னும் இங்கே இருக்கிறது.
இந்த சமூகத்தில் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் சந்திக்கும் சிரமங்களை மற்றவர்கள் உணரும் வகையில் விழிப்பு உணர்வை ஏற்படுத்த 1976-ஆம் ஆண்டுதான் முதன்முதலாக ஆகஸ்ட் - 13 ஆம் தேதியை சர்வதேச இடது கை பழக்கம் உள்ளவர்கள் தினமாக கொண்டாடும் வழக்கம் உருவானது. இந்த சமூகத்தில் இடது கை பழக்கம் உடையவ்ரகள் படும் சிரமங்களை மற்றவர்கள் உணரச் செய்யும் படியான விழிப்புணர்வை உருவாக்கும் பொருட்டே இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
உலகின் மொத்த மக்கள் தொகையில் 7 முதல் 10 சதவீதம் பேர் இடது கை பழக்கம் உடையவர்களாக உள்ளனர் என்று ஐ.நா., அறிக்கை தெரிவிக்கிறது. இடது கை பழக்கம் உள்ளவர்களை கொண்டாடும் விதமாகவும், இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஏன்? இந்த இடக்கை பழக்கம்!
நமது மூளை பெருமூளை, சிறுமூளை மற்றும் ’மெடுல்லா ஆப்லங்கேட்டா’ (Medulla oblongata) என மூன்று பகுதிகள் உள்ளன. இதில் பெருமூளையில், வலது மற்றும் இடது என இரண்டு பாகங்கள் உண்டு. இந்த இரண்டு பாகங்கள்தான் நம் உடலின் அனைத்து செயல்களையும் கட்டுப்படுத்துகின்றன. வலது பக்க மூளை இடது புற உடலையும், இடது பக்க மூளை வலது புற உடலையும் கட்டுப்படுத்தும். நம்மில் பலருக்கு இடது பக்க மூளை அதிக செயல்பாட்டில் இருப்பதால்தான் வலது கையை அதிகம் பயன்படுத்துகிறோம். சிலருக்கு, வலது பக்க மூளை செயல்படுவதால் இடது கை பழக்கம் ஏற்படும். இது மிகவும் இயல்பானது.
குழந்தைகளுக்கு இடதுகைப் பழக்கம் இருந்தால்?
சிலர் தங்கள் குழந்தைக்கு இடதுகைப் பழக்கம் இருந்தால், வலுக்கட்டாயமாக வலது கை பழக்கமாக மாற்ற முயற்சி செய்வார்கள். தங்களை அறியாமல் இடது கையை அவர்கள் பயன்படுத்தும் போது அடிப்பது, திட்டுவது, அவமானப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.
குழந்தைகளின் வளர்ச்சியில் குறைபாட்டை ஏற்படுத்தும். பார்வைக் குறைபாடு, பேசுவதில் குழப்பம் போன்றவற்றை ஏற்படுத்தும் என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், கையெழுத்து சிதைவதுடன் பல நடத்தை மாற்றங்களையும் ஏற்படுத்தும்.
இடதுகை பழக்கம் உள்ள பிரபலங்கள்.
தேசத்தந்தை மகாத்மா காந்தி, நெப்போலியன் போனாபர்ட் மற்றும் அவரது மனைவி ஜோசப்பின், ஜூலியஸ் சீசர், மாவீரன் அலெக்ஸாண்டர், தத்துவமேதை அரிஸ்டாட்டில், பிரிட்டன் பிரதமராக இருந்த வின்சென்ட் சர்ச்சில், சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்த பேடன்பாவெல், கியூபா அதிபராக இருந்த பிடல் காஸ்ட்ரோ, விஞ்ஞானி ஆல்பிரட் ஐன்ஸ்டீன், ஃபோர்டு கார் நிறுவனத்தின் தந்தை ஹென்றி ஃபோர்டு, இங்கிலாந்து மன்னராக இருந்த 3-வது மற்றும் 8-வது எட்வர்ட், 2-வது, 4-வது மற்றும் 6வது ஜார்ஜ் , அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், ஜெரால்ட் ஃபோர்ட், ஜேம்ஸ் கார்ஃபில்ட், தாமஸ் ஜெபர்சன், ரொனால்ட் ரீகன், ஹாரி ட்ரூமென் மற்றும் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் போன்ற சாதனையாளர்கள் இடது கைப்பழக்கம் உள்ளவர்களே.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...