ஜாக்டோ
-ஜியோ போராட்டத்தில் பங்கேற்காது பள்ளிக்கு வரும் ஆசிரியர்களுக்கு போலீஸ்
பாதுகாப்பு வழங்க கல்வி துறை இயக்குனர் உத்தரவிட்டுஉள்ளார்.ஜாக்டோ -ஜியோ
அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில்
ஆசிரியர்கள் ஈடுபட்டுஉள்ளதால் பள்ளிகளை முழுமையாக செயல்படுத்த தொடக்க கல்வி
இயக்குனர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அவர் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்காமல் பள்ளி வரும் ஆசிரியர்களுக்கும், பள்ளிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பும் வழங்க வேண்டும்.சத்துணவு ஊழியரிடம் சாவிஆசிரியர்கள் வராத பள்ளிகளில் சத்துணவு, அங்கன்வாடி அமைப்பாளர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் மூலம் பள்ளிகளை செயல்படுத்தவும்,துவக்க பள்ளிகளில் இரு ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டால் பள்ளி சாவியை பெற்று சத்துணவு அமைப்பாளர் வசம் ஒப்படைத்து பள்ளி செயல்படுத்த வேண்டும்.பணிப்பதிவேட்டில் பதிவுவேலைக்கு வராத ஆசிரியர்களுக்கான ஊதியத்தை பிடித்தம் செய்து அதை சம்மந்தப்பட்ட ஆசிரியரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கினால், பணப்பட்டுவாடா அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ,என தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...