Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொலைநிலைப் படிப்புகளை எந்தெந்த பல்கலைக்கழகங்கள் வழங்க முடியும்? யுஜிசி அறிவிப்பு

*2019-ஆம் ஆண்டில் நாடு முழுவதிலும் எந்தெந்த பல்கலைக்கழகங்கள் தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியும் என்ற விவரத்தை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.இந்த விவரங்கள் யுஜிசியின் இணையதளத்தில் (www.ugc.ac. in/deb) வெளியிடப்பட்டுள்ளன


*தொலைநிலைப் படிப்புகளை நிர்வகிக்கும் பொறுப்பு யுஜிசி கட்டுப்பாட்டில் வந்த பின்னர், உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக புதிய வழிகாட்டுதலை யுஜிசி நடைமுறைப்படுத்தியது


*இதனால் குறிப்பிட்ட "நாக்' தரப் புள்ளிகளைப் பெற்ற கல்வி நிறுவனங்கள் மட்டுமே தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியும் என்ற நிலை உருவானது


*அதன்படி, 2018-2019-ஆம் கல்வியாண்டில் தமிழகத்திலுள்ள 5 பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியும் என்ற நிலை உருவானது


*இதுபோன்று, 2019-2020 கல்வியாண்டில் நாடு முழுவதும் எந்தெந்த கல்வி நிறுவனங்கள் தொலைநிலைப் படிப்புகளை வழங்க முடியும் என்ற அறிவிப்பை யுஜிசி இப்போது வெளியிட்டுள்ளது


*இதில், கடந்த ஆண்டில் தகுதி பெற்றிருந்த அந்த 5 தமிழக பல்கலைக்கழகங்கள் மட்டுமே 2019-ஆம் ஆண்டிலும் தொலைநிலைப் படிப்புகளை வழங்கும் தகுதியைப் பெற்றிருக்கின்றன


*அதன்படி, சென்னைப் பல்கலைக்கழகம் 30 தொலைநிலைப் படிப்புகளையும், அண்ணா பல்கலைக்கழகம் 3 தொலைநிலைப் படிப்புகளையும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் 73 படிப்புகளையும், தமிழ் பல்கலைக்கழகம் எம்.பி.ஏ., பி.எட். உள்ளிட்ட 16 படிப்புகளையும், எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் பி.காம்., பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. ஊடகவியல் மற்றும் தகவல்தொடர்பு, பிபிஏ, எம்.ஏ. ஆங்கிலம் ஆகிய 5 படிப்புகளையும் வழங்கத் தகுதி பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




1 Comments:

  1. Annamalai university not having in the list. What reson?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive