பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல்
பாட செய்முறை பயற்சி வகுப்பில் சேர்வதற்கான தேதியை அரசு தேர்வுகள் இயக்கம்
அறிவித்துள்ளது. நடைபெறவுள்ள மார்ச் 2019, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத
விரும்பும் நேரடித் தனித்தேர்வர்களுள், இவ்வியக்ககத்தால் ஏற்கனவே
அறிவிக்கப்பட்ட தேதிகளில் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர
தவறிய தனித்தேர்வர்கள், வருகிற 7ம் தேதி முதல் 14ம் ேததி வரை
(ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்
அலுவலகங்களை அணுகி, பதிவுக்கட்டணமாக, 125ஐ செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு
செய்து கொள்ள வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலர்களால் ஒதுக்கீடு
செய்யப்படும் பள்ளிகளுக்குச் சென்று அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி
வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்த உடன், மாவட்டக் கல்வி அலுவலரால் வழங்கப்படும் பயிற்சி வகுப்பில் சேர்ந்ததற்கான விண்ணப்ப அத்தாட்சி சீட்டைப் பெற்று அவரவர் கல்வி மாவட்டத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வு சேவை மையத்தில் சமர்ப்பித்து விட்டு, மார்ச் 2019 எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்விற்கு, வரும் 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை அறிவியல் பாடம் கருத்தியல் உட்பட விண்ணப்பிக்கத் தகுதியான பாடங்களுக்கும் (அனைத்து / தவறிய பாடங்கள்) அச்சேவை மையங்களின் மூலம் தனியாக ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பத்தினை, www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில், வரும் 7 முதல் 14ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் அந்தந்த கல்வி மாவட்ட அலுவலரை அணுகி முழுவிபரங்களையும் அறிந்து கொள்ளலாம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...