ஸ்டிரைக்' நாட்களுக்கு சம்பளம்: கருவூல அதிகாரிகள் மீது நடவடிக்கை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு, வேலை செய்யாத நாட்களுக்கும் சேர்த்து
சம்பளம் வழங்கும் வகையில், கருவூலத்தில் ஊதிய பட்டியல் தயாரானதை,
அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு காரணமானோர் மீது, ஒழுங்கு
நடவடிக்கை எடுக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பணிக்கு வராத
நாட்களுக்கு, சம்பள பிடித்தம் செய்ய வேண்டும் என, கருவூல அதிகாரிகளுக்கும்,
துறை தலைவர்களுக்கும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, தலைமை
செயலர், கிரிஜா வைத்தியநாதன், அனைத்து துறைகளுக்கும் கடிதம்
அனுப்பிஉள்ளார். ஆனால், 'ஸ்டிரைக்' நாட்களுக்கும் சேர்த்து, அனைத்து
நாட்களுக்கும், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கும்
வகையில், அரசு கருவூலங்களுக்கு, சம்பள பட்டியல்கள் அனுப்பப்பட்டு
உள்ளன.சார்நிலை கருவூல அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின், இந்த முறைகேடுகளை,
அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து, வருவாய் துறை மற்றும் பள்ளி
கல்வித் துறைக்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, துறை வாரியாக,
முறைகேட்டில் ஈடுபட்ட, சம்பள பட்டுவாடா அதிகாரிகள் மீதும், சார்நிலை கருவூல
அதிகாரிகள் மீதும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, நேற்று உத்தரவிடப்பட்டு
உள்ளது.பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பிய
சுற்றறிக்கை:போராட்டம் என்ற பெயரில், ஆசிரியர்கள் பணிக்கு வராமல் உள்ள
நாட்களுக்கு, சம்பளத்தை கட்டாயம் பிடித்தம் செய்து, அவர்களின் பணி
பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்.இதை மீறி, வேலைக்கு வராதோருக்கு சம்பளம்
வழங்கப்பட்டால், பண பட்டுவாடா அலுவலர்கள் மீது, துறை ரீதியாக கடும்
நடவடிக்கை எடுக்கப்படும். இதை, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும்
கவனத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது
2nd Mid Term Exam 2024
Latest Updates
Home »
» ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பணிக்கு வராத நாட்களுக்கு, சம்பள பிடித்தம் செய்ய வேண்டும் என, கருவூல அதிகாரிகளுக்கும், துறை தலைவர்களுக்கும், தமிழக அரசு உத்தரவு
அப்படியே சட்டசபைக்கு வந்த நாட்களுக்கு மட்டும் சம்பளத்தை கொடுங்கப்பா.
ReplyDelete